மக்ரான் (Makran) ஈரான், ஆப்கானித்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் அமைந்துள்ள பலூசிஸ்தானின் தெற்கில் அரபிக் கடற்கரையை ஒட்டி அமைந்த பகுதியாகும். இது ஒரு அரை பாலைவனப் பகுதி ஆகும். மக்ரான் கடற்கரைப் பகுதியில் ஈரானின் சிஸ்தான் மாகாணப் பகுதிகளும், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணப் பகுதிகளும் அடங்கியுள்ளது. மக்ரான் பகுதி ஈரானையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைப் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் பலூச்சி மொழி பேசும் பலூச்சி மக்கள் வாழ்கின்றனர்.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
வெளிர் சிவப்பு வண்ணத்தில் பலூசிஸ்தான் பகுதி

புவியியல்

மக்ரான் பகுதியில் குவாடர் துறைமுக நகரம் உள்ளது. பாகிஸ்தான் மக்ரான் பகுதியில் 1,000 கிலோமீட்டர் நீளம் கொண்ட மலைத்தொடரில் 750 கிலோமீட்டர் நீளம் கொண்ட மலைத்தொடர் பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் அமைந்துள்ளது. பாலைவனம் போன்ற இப்பகுதியில் மழை மிகக் குறைவு. மீன்பிடித் தொழில் அதிகம் உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மக்ரான்&oldid=456221" இலிருந்து மீள்விக்கப்பட்டது