மங்கொம்பு - 12
மங்கொம்பு - 12 (MO 12 - Ranjini) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[1] மங்கொம்பு - 5 மற்றும் மேம்பட்ட சோனா ஆகிய நெல் இரகங்களை பரம்பரைத் தேர்வு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது,[2] ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1995[3] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, இரஞ்சினி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[2]
| மங்கொம்பு - 12 MO 12 - Ranjini |
|---|
| வேளாண் பெயர் |
| இரஞ்சினி (Ranjini) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| மங்கொம்பு - 5 X மேம்பட்ட சோனா |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 115 - 120 நாட்கள் |
| வெளியீடு |
| 1995 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பின்னணி
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[4] இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சி மற்றும் குலைநோய் போன்ற நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட குள்ள நெல் இரகமாகும்.[5]
சான்றுகள்
- ↑ Paddy varieties of Kerala - Renjini (MO 12)
- ↑ 2.0 2.1 "Varieties Released - MO 12-Ranjini". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-31.
- ↑ Varieties released/ identified MO.12 Renjini
- ↑ Kerala Agricultural University (KAU) Medium Duration - Renjini (MO-12)
- ↑ "Rice Variety information Kole lands Medium duration Ranjini (MO-12):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-08-31.