மங்கொம்பு - 6 (MO 6 - Pavizham) எனப்படும் இந்த நெல் வகை, IR 8 மற்றும் Karivenal ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைந்த அமைப்பு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட,[1] தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் ஒரு கலப்பின நெல் வகையாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1985[2] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, பவிழம் (பவளம்) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

மங்கொம்பு - 6
MO 6 - Pavizham
வேளாண் பெயர்
பவளம் (Pavizham)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
IR 8 X Karivenal
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
வெளியீடு
1985
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

கேரளத்தின், ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதிக்கு ஏற்ற நெல் இரகமாக உள்ள இது, அழுகலுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட இந்த நெல் இரகம், உறை கருகல் நோய்க்கும் ஓரளவு எதிர்ப்புத் திறன் கொண்டது.[3] மேலும் நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படும் இந்நெல் இரகம், குறுகிய தடித்த, இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும்.[3]

சான்றுகள்

  1. 1.0 1.1 "MO 6-Pavizham". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-26.
  2. Varieties released by RRS Moncompu
  3. 3.0 3.1 "Pavizham (MO 6) Medium duration varieties Season : Virippu (I crop / autumn), Mundakan (II crop / winter), Puncha (III crop / summer)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2025. Retrieved 2025-08-26.
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_6&oldid=456457" இலிருந்து மீள்விக்கப்பட்டது