மஞ்சான்பூர் ('Manjhanpur), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கௌசாம்பி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தெற்கே 168 கிலோ மீட்டர் தொலைவிலும், கான்பூருக்கு தென்மேற்கே 161 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் கௌசாம்பி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

மஞ்சான்பூர்

நகரம்
மஞ்சான்பூர் is located in உத்தரப் பிரதேசம்
மஞ்சான்பூர்
மஞ்சான்பூர்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மஞ்சாபூர் நகரத்தின் அமைவிடம்
மஞ்சான்பூர் is located in இந்தியா
மஞ்சான்பூர்
மஞ்சான்பூர்
மஞ்சான்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°32′N 81°23′E / 25.53°N 81.38°E / 25.53; 81.38
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கௌசாம்பி மாவட்டம்
ஏற்றம்
90 m (300 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்16,457
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுUP-73
இணையதளம்https://kaushambi.nic.in/

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12 வார்டுகளும், 3,026 குடியிருப்புகளும் கொண்ட மாஞ்சான்பூர் நகரத்தின் மக்கள் தொகை 16,457 ஆகும். அதில் 8,717 ஆண்கள் மற்றும் 7,740 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 892 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.2% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,610 மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 49.49%, இசுலாமியர் 49.92% மற்றும் பிற சமயத்தினர் 0.42 % வீதம் உள்ளனர்.[1]

போக்குவரத்து

தொடருந்து நிலையம்

மஞ்சான்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் பர்வாரி தொடருந்து நிலையம்[2]மற்றும் 15 கிலோ மீட்டர் தொலைவில் சிராது தொடருந்து நிலையம் உள்ளது.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மஞ்சான்பூர்&oldid=456895" இலிருந்து மீள்விக்கப்பட்டது