மதுரா சிங்கத் தூண்


மதுரா சிங்கத் தூண் (Mathura lion capital), கிபி முதல் நூற்றாண்டின் துவக்க காலத்தில், பரத கண்டத்தின் மதுரா பகுதிகளை ஆண்ட இந்தோ சிதிய மன்னர்கள் நிறுவிய இந்த மணற்கல் சிங்கத் தூணை, தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்தில் 1869ம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. [1] இச்சிங்கத்தூணில் பிராகிருதத்தின் கரோஷ்டி எழுத்துமுறையில் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.[2] [3]

மதுரா சிங்கத் தூண்
படிமம்:MathuraLionCapital.JPG
மதுரா சிங்கத் தூண்
செய்பொருள்செம் மணற்கல்
அளவு16.75 அங்குலம்
உருவாக்கம்கிபி 1-10
கண்டுபிடிப்புமதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்

இந்தோ சிதியர்களின் வடக்கு சத்திரபதி மன்னர் முகி என்பவரின் நினைவாக இச்சிங்கத் தூண் நிறுவப்பட்டதாகும். இச்சிங்கத் தூணில் இந்தோ சிதிய மன்னர்களின் வழித்தோன்றல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. [4]

இச்சிங்க தூணில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகள், மகாசம்ஹிகா புத்தப் பிரிவை எதிர்க்கும் சர்வாஸ்திவாத பௌத்தத்தை இந்தோ சிதிய மன்னர்கள் ஆதரித்தாக குறிப்பிடுகிறது. [5]தற்போது இச்சிங்கத் தூண் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

படிமம்:Mathura Lion Capital showing Triratana.jpg
சிங்கத் தூணின் நடுவில் பௌத்த சமயத்தின் திரிரத்தினச் சின்னம்
படிமம்:Kharoshthi inscription on base of Mathura capital.jpg
சிங்கத்தூணில் அடியில் கரோஷ்டி எழுத்துக் கல்வெட்டுக் குறிப்புகள்
படிமம்:Mathura lion capital inscriptions.jpg
சிங்கத் தூணின் குறுக்கு வெட்டு வரைபடங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Jason Neelis (19 November 2010). Early Buddhist Transmission and Trade Networks: Mobility and Exchange Within and Beyond the Northwestern Borderlands of South Asia. BRILL. p. 122. ISBN 90-04-18159-8.
  2. Red Sandstone Pillar Capital பரணிடப்பட்டது 2010-12-16 at the வந்தவழி இயந்திரம், British Museum, accessed August 2010
  3. An Inscribed Silver Buddhist Reliquary of the Time of King Kharaosta and Prince Indravarman, Richard Salomon, Journal of the American Oriental Society, Vol. 116, No. 3 (Jul. - Sep., 1996), pp. 442 [1]
  4. "List of the inscriptions on the Mathura lion capital". Archived from the original on 2017-08-14. Retrieved 2017-10-13.
  5. Rosenfield, "The dynastic art of the Kushans", p.134

ஆதாரங்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=மதுரா_சிங்கத்_தூண்&oldid=458331" இலிருந்து மீள்விக்கப்பட்டது