மதுரை மல்லி (Madurai Malli) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தென் மத்தியப் பகுதியில் வளர்க்கப்படும் ஒரு வகை மல்லிகை ஆகும்.[1] இம்மல்லிக்கு 2012-13-ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற முதல் மலர் மதுரை மல்லி ஆகும்.

மதுரை மல்லி
குறிப்புமல்லிகைப் பூ மதுரைப் பகுதி
வகைவிவசாயப் பொருள்
இடம்மதுரை, தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2012–13

மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் பயிரிடப்படும் ஒரு வகை மல்லிகை. சங்க இலக்கியம், கோவில் கலைக் குறிப்புகளுடன், பூக்கும் தாவரங்கள் கி. மு. 300 முதல் பயிரிடப்பட்டு வருகின்றன என்பது தெரியவருகிறது. இந்தப் பூக்கள் தனித்துவமான வாசனை, நறுமணத்திற்காக அறியப்படுகின்றன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Application details". Government of India. Archived from the original on 6 May 2023. Retrieved 1 December 2023.
"https://tamilar.wiki/w/index.php?title=மதுரை_மல்லி&oldid=458482" இலிருந்து மீள்விக்கப்பட்டது