மனோரமா தேவி (Manorama Devi) பீகாரைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கயா-ஜகானாபாத் - அர்வால் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றினார்.[2] தற்பொழுது மூன்றாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மனோரமா தேவி
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 2024
முன்னையவர்சுரேந்திர பிரசாத் யாதவ்
தொகுதிபெலகானி
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2015–2021
தொகுதிஜகானாபாத் & அர்வால்
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2003–2009
தொகுதிஜகானாபாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகயை, பீகார், இந்தியா
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்பிந்தேசுவரி பிரசாத் யாதவ் (கணவர்)
பிள்ளைகள்இராக்கி யாதவ்[1]

இளமை

தேவி பீகார் மாநிலம் கயாவில் பிறந்தார். . இவர் தனது இடைநிலைப் படிப்பை 1991-இல் முடித்தார். தேவி1997-இல் முதுகலை பட்டப்படிப்பையும், 1994-இல் முதுகலை பட்டப்படிப்பையும் போத்கயாவில் உள்ள மகத் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[3] இவரின் கணவர் பிந்தேசுவரி பிரசாத் யாதவ் சூலை 23, 2020 அன்று பாட்னாவில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார்

ஒரு குற்றத்திற்காக மே 2016-இல் இவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.[4]

தொழில்

தேவி 2003 முதல் 2009 வரை கயா-ஜெஹனாபாத் - அர்வால் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகப் பீகார் சட்டமன்றத்தில் சுயேச்சையாகவும், 2015 முதல் 2021 வரை இரண்டாவது முறையாக ஐக்கிய ஜனதா தளம் சார்பாகவும் பணியாற்றினார். இவர் 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் கயா மாவட்டத்தில் உள்ள அத்ரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியின் அஜய் குமார் யாதவிடம் 7,931 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.[5][6]

2024ஆம் ஆண்டில், ஜஹானாபாத் மாவட்டத்தின் பெலகஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராக இவர் நிறுத்தப்பட்டார். இந்த இடத்தை முன்னர் சுரேந்திர பிரசாத் யாதவ் வகித்தார். இவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நடைபெற்ற இடைத்தேர்தலில், இவர் இராச்டிரிய ஜனதா தளத் தலைவரும் சுரேந்திர பிரசாத் யாதவின் மகனுமான விசுவநாத் குமார் சிங்கிற்கு எதிராகப் போட்டியிட்டு 21391 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

  1. The Economic Times (10 May 2016). "JD(U) suspends MLC Manorama Devi after her son is sent to jail" இம் மூலத்தில் இருந்து 25 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241125142323/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jdu-suspends-mlc-manorama-devi-after-her-son-is-sent-to-jail/articleshow/52210485.cms?from=mdr. 
  2. "Bihar Election: ये हैं बिहार चुनाव की सबसे 'दबंग' महिला प्रत्याशी, दौलत जानकर रह जाएंगे हैरान". 14 October 2020 இம் மூலத்தில் இருந்து 25 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241125142448/https://www.tv9hindi.com/india/manorama-devi-is-the-richest-candidate-of-bihar-election-2020-319384.html. 
  3. "Manorma Devi(Janata Dal (United)(JD(U))):Constituency- ATRI(GAYA) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-06-27.
  4. "Days after son 'shot Gaya teen dead', MLC Manorama Devi surrenders". indianexpress.com. 18 May 2016. Retrieved 18 May 2016.
  5. Live, A. B. P. "Atri Assembly Election Results 2020 Live Updates, Atri Assembly Election Latest News & Updates". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-27.
  6. "ATRI assembly seat Election Results 2020 Live Updates: जानें, अतरी सीट के नतीजे". आज तक (in இந்தி). 2020-11-10. Retrieved 2024-06-27.
"https://tamilar.wiki/w/index.php?title=மனோரமா_தேவி&oldid=459895" இலிருந்து மீள்விக்கப்பட்டது