ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான் (Henri René Albert Guy de Maupassant, பிரெஞ்சு பலுக்கல்: gi d(ə) mo.pa.ˈsɑ̃ ; 5 ஆகத்து 1850 – 6 சூலை 1893) 19 -ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார்.ஃபிரான்சின் வடக்கில் உள்ள நார்மாண்டியிலுள்ள துறைமுக நகரம் ஒன்றில் 1850-இல் மாப்பசான் பிறந்தார். இவரது 13 ஆம் வயதில் இவரின் பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது. மாப்பசானின் தாய் இலக்கிய அறிவும் ஆர்வமும் உடையவர்.

மாப்பசான்
இயற்பெயர் ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான்
பணி சிறுகதை எழுத்தாளர்
தேசியம் ஃபிரான்சு
வகை இயற்கை
கையொப்பம் Guy de Maupasant Signature.png

பட்டப்படிப்பு முடித்த மாப்பசான் பெர்சியாவிக்கு எதிரான ஃபிரெஞ்சுப் போரில் பங்கேற்றார். பின்னர் ஃபிரெஞ்சு அரசில் எழுத்தராய்ப் பணியமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில் எழுதத் தொடங்கினார். இவரைப் போன்று தமிழகத்தின் நவீன சிறுகதை இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஜெயகாந்தன் தமிழ்நாட்டின் மாப்பசான் என்று அழைக்கப்படுகிறார்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மாப்பசான்&oldid=465131" இலிருந்து மீள்விக்கப்பட்டது