மாயபிம்பம் சனவரி 23, 2026இல் கே. ஜே. சுரேந்தர் இயக்கத்தில் வெளிவந்த காதல் தமிழ்த்திரைப்படமாகும்.

மாயபிம்பம்
திரைப்பட பதாகை
இயக்கம்கே. ஜே. சுரேந்தர்
தயாரிப்புகே. ஜே. சுரேந்தர்
கதைகே. ஜே. சுரேந்தர்
இசைநந்தா
நடிப்பு
  • ஆகாஷ் நடராஜன்
  • ஜானகி
ஒளிப்பதிவுஎட்வின் சகாயின்
படத்தொகுப்புவினோத்
கலையகம்செல்ப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ்
வெளியீடு23 சனவரி 2026 (2026-01-23)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கும்

இக்கதை 2005ஆம் ஆண்டில் நிகழ்கிறது. மருத்துவக் கல்லூரி மாணவனான ஜீவா (ஆகாஷ் நாகராஜன்) பள்ளிக்காலம் முதலே நண்பர்களாக இருக்கும் மூவருடன் நெருக்கமாக இருக்கிறார். இவர்களது அடிக்கடியான பேச்சுப் பொருளாக பெண்களைப் பற்றிய விவாதங்கள் இருக்கின்றன. நண்பர்களில் ஒருவரான மோகன் பெண்களைப் பற்றி தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் பேசிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு பேருந்துப் பயணத்தின்போது ஆகாஷ் சுமதி (ஜானகி சீனிவாசன்) என்ற இளம்பெண்ணைக் காண்கிறார். அவரது முகத்தைப் பார்த்தவுடன் அவரது மனதில் ஏதோ ஒன்று நிகழ்கிறது. மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு விபத்து நிகழ்கிறது. அந்த விபத்தே இருவரையும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

படிப்படியாக இருவரும் பேசி பழகுகிறார்கள். இந்நிலையில் ஜானகி குறித்து ஆகாஷின் நண்பர்கள் சில விஷயங்களைக் கூற, அவர் குழப்பமடைகிறார். அவர்களின் வார்த்தைகளை உதாசீனம் செய்யவும் முடியாமல், நம்பவும் முடியாமல் தடுமாறுகிறார். தன் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் நண்பர்கள் சொல்லும் விஷயங்களுக்கும் இடையே சிக்குண்டு போராடுகிறார்.

இதையடுத்து நண்பர்களின் திட்டப்படி ஜானகியை தனியாக வெளியே அழைத்துச் செல்கிறார் ஆகாஷ். அவ்வாறு செல்லும்போது அங்கே எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன.

ஆகாஷின் வாழ்வில் என்ன திருப்பங்கள் ஏற்படுகின்றன, நம் மனதில் ஒருவரைப் பற்றி உருவாகும் பிம்பங்களும் உண்மைக்கும் இடையேயான வேறுபாடு என்ன என்பதையே இப்படம் சொல்கிறது.

நடிகர்கள்

  • ஆகாஷ் நடராஜன் - ஜீவா
  • ஜானகி சீனிவாசன் - சுமதி
  • ஹரி ருத்ரன்
  • ராஜேஷ்
  • அருண்குமார்

தயாரிப்பு

படத்தின் தூண்டோட்டம் 2018இல் வெளிவந்தது.[1] படத்தின் பதாகையை சுந்தர் சி திசம்பர் 3, 2025இல் வெளியிட்டார்.[2] படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சனவரி 13, 2026இல் வெளியிட்டார்.[3]

விமர்சனங்கள்

தினத்தந்தி நாளிதழில் வந்த விமர்சனத்தில், "ஒரு சாதாரண காதல் கதையை, அழகியல் நிறைந்த கவிதையாக மட்டுமல்லாமல் கனத்த இதயங்களை சுமக்க செய்யும் அற்புதமாக படகாகவும் இயக்கி நீந்த விட்டுள்ளார், இயக்குனர் கே.ஜே.சுரேந்தர். கிளைமேக்ஸ் அதிர்வை தருகிறது" என்று எழுதினர்.[4]

ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "நாம் சந்திக்கும் மனிதர்கள் குறித்து நமக்கு தோன்றுகிற முன்முடிவு, பிறர் சொல்கிற அபிப்பிராயம் என மனிதர்களை எடைபோட்டுவிட்டு அணுகுவது எவ்வளவு அபத்தம் என்ற அழுத்தமான பேசுபொருளைப் பேசும் 'மாயபிம்பம்', காட்சியமைப்பில் புதுமையையும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனத்தையும் சேர்த்திருந்தால் தவிர்க்கமுடியாத படைப்பாகியிருக்கும்" என்று எழுதினர்.[5]

தினமலர் நாளிதழில் வந்த விமர்சனத்தில், "மாயபிம்பம் - சினிமாத்தனம் இல்லாத நல்ல சினிமா" என்று எழுதி       மதிப்பீடுகளை வழங்கினர்.[6]

மேற்கோள்கள்

  1. மா.பாண்டியராஜன் (2018-11-26). "`நாலு பசங்க ஒண்ணு சேர்ந்தா எதப் பத்திப் பேசுவாங்க..?' - 'மாயபிம்பம்' டீசர்". vikatan.com/. Retrieved 2026-01-23.
  2. Self Start Productions (2025-12-03), Director SUNDAR C Releases MAAYABIMBUM Poster, retrieved 2026-01-23
  3. "Instagram". www.instagram.com. Retrieved 2026-01-23.
  4. தினத்தந்தி (2026-01-23). ""மாயபிம்பம்" திரைப்பட விமர்சனம்". dailythanthi.com. Retrieved 2026-01-23.
  5. டீம், விகடன் (2026-01-23). "மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்?". vikatan.com/. Retrieved 2026-01-23.
  6. "மாயபிம்பம் - விமர்சனம் {3/5} : மாயபிம்பம் - சினிமாதனம் இல்லாத நல்ல சினிமா - Mayabimbam". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2026-01-23.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மாயபிம்பம்&oldid=465322" இலிருந்து மீள்விக்கப்பட்டது