மில்லிசைட்டு
மில்லிசைட்டு (Millisite) என்பது NaCaAl6(PO4)4(OH)9·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய பாசுப்பேட்டு கனிமமான இக்கனிமம், யூட்டா மாநிலத்தின் லேகியைச் சேர்ந்த திரு. எப். டி.T. மில்லிசு என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.[1] மில்லிசைட்டு கனிமம் மாற்றமடைந்த பாசுப்பேட்டு படிவுகளில் காணப்படுகிறது.[2]
| மில்லிசைட்டு Millisite | |
|---|---|
| படிமம்:Millisite.jpg வெளிர் மஞ்சள் நிறப் படிகங்கள் | |
| பொதுவானாவை | |
| வகை | பாசுப்பேட்டு கனிமங்கள் |
| வேதி வாய்பாடு | NaCaAl6(PO4)4(OH)9·H2O |
தோற்றம்
மில்லிசைட்டு முதலில் யூட்டாவின் பேர்ஃபீல்டு மற்றும் செனகலின் தீசு ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுவதாக அறியப்பட்டது.[3] அதன் பின்னர் இது புளோரிடாவின் போன் வேலி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு இது அலுமினியம் பாசுப்பேட்டு மண்டலத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.
மேற்கோள்கள்
- ↑ "Millisite". www.mindat.org (in ஆங்கிலம்). Retrieved 2025-08-22.
- ↑ "Millisite Mineral Data". webmineral.com. Retrieved 2025-08-22.
- ↑ Owens, J. P.; Altschuler, Z. S.; Berman, Robert (1960-06-01). "Millisite in Phosphorite from Homeland, Florida*". American Mineralogist 45 (5-6): 547–561. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-004X. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/45/5-6/547/541642/Millisite-in-Phosphorite-from-Homeland-Florida?redirectedFrom=fulltext.