முனு ஆதி
முனு ஆதி (4 செப்டம்பர், 1926 - 21 சூன், 2005) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் சட்டப்பேரவைத் தலைவரும் ஆவார். இவர் துவக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் சோசலிஸ்டு கட்சியில் சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சென்றார். சிறையில் அண்ணாவைச் சந்தித்தார். சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், திமுக கட்சியில் இணைந்தார். இவர் தாம்பரம் ஊராட்சி மன்ற உருப்பினராக இருந்து, பின்னர் நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[1] இவர் சட்டமன்றத் தொகுதியில் 1977 முதல் 1980 வரை சேவையாற்றினார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.[3][4]
முனு ஆதி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1962–1967 | |
| முன்னையவர் | ஏ. எசு. துரைசாமி ரெட்டியார் |
| பின்னவர் | மு. கருணாநிதி |
| தொகுதி | சைதாப்பேட்டை |
| பதவியில் 1977–1980 | |
| பின்னவர் | பம்மல் நல்லதம்பி |
| தொகுதி | தாம்பரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 6 அக்டோபர் 1926 சென்னை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| பிற அரசியல் தொடர்புகள் | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
மேற்கோள்கள்
- ↑ ""சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்த்தவர் முனு ஆதி". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2016/Sep/24/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-2570553.html. பார்த்த நாள்: 2 July 2025.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 239-240.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. Archived from the original on 2009-03-03. Retrieved 2017-04-23.
- ↑ "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.