மெட்டாபான்டு (Metafont) என்பது கணினி மொழியாகும். இது குறிப்பாக எண்ணிம அச்சுருக்களை (Typefaces) வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் புகழ்பெற்ற கணினி அறிவியலாளர் டொனால்டு எர்வின் நூத்து உருவாக்கினார். இது டெக்சு அச்சுக்கோர்ப்பு முறையுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. வழக்கமான அச்சுரு வடிவமைப்பு மென்பொருட்கள் போலல்லாமல், மெட்டாஃபான்ட் வடிவியல் சமன்பாடுகளைப் பயன்படுத்தி எழுத்துக்களை வரையறுக்கிறது [1].

மெட்டாபான்டு
உருவாக்குனர்டொனால்டு எர்வின் நூத்து
அண்மை வெளியீடு2.71828182 / சனவரி 2021; 5 ஆண்டுகளுக்கு முன்னர் (2021-01)
இயக்கு முறைமைபல்லியக்குதளம்
மென்பொருள் வகைமைகணினி மொழி
உரிமம்அனுமதியுரிமம்

என்பது ஒரு கணினி மொழியாகும். இது குறிப்பாக டிஜிட்டல் அச்சுருக்களை (Typefaces) வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் புகழ்பெற்ற கணினி அறிவியலாளர் டொனால்ட் குனுத் (Donald Knuth) உருவாக்கினார். இது TeX அச்சுக்கோர்ப்பு முறையுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. வழக்கமான அச்சுரு வடிவமைப்பு மென்பொருட்கள் போலல்லாமல், மெட்டாஃபான்ட் வடிவியல் சமன்பாடுகளைப் பயன்படுத்தி எழுத்துக்களை வரையறுக்கிறது [1].

தோற்றம்

டொனால்ட் குனுத் தனது 'கணினி நிரலாக்கக் கலை' (The Art of Computer Programming) புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின் அச்சுத் தரம் திருப்திகரமாக இல்லாததால், TeX மற்றும் மெட்டாஃபான்ட் ஆகியவற்றை உருவாக்கத் தொடங்கினார். 1970-களின் இறுதியில் தொடங்கப்பட்ட இத்திட்டம், 1980-களில் முழுமையடைந்தது. எழுத்துருக்கள் என்பது வெறும் வரைபடங்கள் அல்ல, அவை கணித விதிகளால் பிணைக்கப்பட்ட வடிவங்கள் என்ற கருத்தியலின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது.டொனால்ட் குனுத் தனது 'கணினி நிரலாக்கக் கலை' (The Art of Computer Programming) புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின் அச்சுத் தரம் திருப்திகரமாக இல்லாததால், டெகசு, மெட்டாஃபான்டு ஆகியவற்றை உருவாக்கத் தொடங்கினார். 1970-களின் இறுதியில் தொடங்கப்பட்ட இத்திட்டம், 1980-களில் முழுமையடைந்தது. எழுத்துருக்கள் என்பது வெறும் வரைபடங்கள் அல்ல, அவை கணித விதிகளால் பிணைக்கப்பட்ட வடிவங்கள், என்ற கருத்தியலின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது.

செயற்படும் முறை

மெட்டாஃபான்டு என்பது 'விளக்க மொழி' (Descriptive language) ஆகும். இதில் ஒரு எழுத்தை வடிவமைக்க அதன் வளைவுகள், புள்ளிகள், கோடுகளுக்கு இடையிலான கணிதத் தொடர்புகள் விவரிக்கப்படுகின்றன.

  • அளபுருவாக்கம் (Parameterization): இது மெட்டாஃபான்ட்டின் மிக முக்கியமான அம்சம். ஒரு அச்சுருவின் தடிமன், உயரம், சாய்வு போன்றவற்றை மாறிகளாக (Variables) வரையறுக்கலாம். இந்த மாறிகளை, மாற்றுவதன் மூலம் ஒரே மூலக் குறியீட்டில் இருந்து (Source code), தடிமனான (Bold), சாய்வான (Italic) அல்லது ஒடுங்கிய (Condensed) எழுத்துக்களை உருவாக்க முடியும் [2].
  • கணித வளைவுகள்: இது பெசியர் வளைவுகளை (Bézier curves) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
  • தூரிகை மாதிரி (Pen model): ஒரு குறிப்பிட்ட வடிவமுள்ள தூரிகை, பாதை யொன்றில் நகரும்போது ஏற்படும் தடயத்தை எழுத்துருவாக மாற்றும்

மெட்டாஃபான்டும், போஸ்ட்ஸ்கிரிப்டும்

மெட்டாஃபான்od ராஸ்டர் (Raster) படங்களை உருவாக்குகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தில் (Resolution), அச்சுப்பொறிகளுக்குத் தேவையான புள்ளிகளை இது கணக்கிடுகிறது. ஆனால், அடோப் நிறுவனத்தின் போஸ்ட்ஸ்கிரிப்ட் (PostScript) வகை அச்சுருக்கள், 'வெக்டர்' (Vector) முறையைப் பயன்படுத்தின. இதனால், புதுவகைக் கணினித் திரைகளில் மெட்டாஃபான்டு அச்சுருக்களைப் பயன்படுத்துவதில் தொடக்கத்தில் சில இடர்கள் இருந்தன. பின்னர் 'MetaPost' போன்ற கருவிகள் மூலம், மெட்டாஃபான்டு குறியீடுகளை வெக்டர்(Vector) வடிவங்களாக மாற்றும் வசதி உருவானது.[3].

புதுவகைக் கணினி

மெட்டாஃபான்டு மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மிக முக்கியமானதும், பிரபலமானதுமான அச்சுரு 'புதுவகைக் கணினி' ('கம்ப்யூட்டர் மாடர்ன்' - Computer Modern) ஆகும். இது டெக்சு கோப்புகளில் இயல்புநிலை அச்சுருவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் நேர்த்தியான கணிதக் குறியீடுகளையும், தெளிவான எழுத்துக்களையும் கொண்டிருப்பதால் அறிவியல், கல்வித்துறை ஆவணங்களில் பன்னாட்டு பயன்படுத்தப்படுகிறது.[4].

எடுத்துக்காட்டு

பீன்சு போன்ற வடிவம் ("B" of a font):

%file name: beta.mf
%mode_setup;
% Define a beanlike shape for the character B
beginchar("B",11pt#,11pt#,0);
  % Setup coordinates as an equation system
  y1=y2=y3=0;
  y4=y5=y6=h;
  x1=x4=0;
  x2=x5=w;
  x3=x6=2*w;

  % Define pen
  pickup pencircle xscaled 0.2w yscaled 0.04w rotated 45;

  % Draw the character curve
  % z1 is the same as (x1, y1)
  draw z1..z3..z6{z2-z6}..z5..{z4-z2}z4..cycle;
endchar;

end

இது கீழ்கண்ட வரைகலை வடிவத்தினை உருவாக்கும்:

 

மேற்கூறிய எடுத்துக்காட்டு வடிவத்தினை, முனையம் வழியே கட்டளையாகத் தர வேண்டும்:[5]

mf '\mode=ljfour; mode_setup; input beta.mf';
gftopk beta.600gf beta.600pk

பிறகு இது லேடெக்சு (LaTeX) கோப்பாக பின்வருமாறு தரவேண்டும்.[5] (all files should dwell in the same directory, or the TeX system should be informed about them using appropriate methods):

\documentclass{article}

\newfont{\letterbeta}{beta}
\newcommand{\otherbeta}{{\letterbeta B}}

\begin{document}
Let's try having a strange \otherbeta\ here.
\end{document}

வலப்பக்கமுள்ள ஆங்கில வாக்கியமாக பிடிஎப் கோப்பில் தோன்றும்:  

முக்கியத்துவம்

மெட்டாஃபான்டடு அச்சுக்கலை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இது எழுத்துரு வடிவமைப்பை ஒரு கலை வடிவத்திலிருந்து, கணிதத் துல்லியமான ஒரு அறிவியல் முறையாக மாற்றியது. இன்று புழக்கத்தில் இருக்கும் பல புதிய அச்சுரு வடிவமைப்பு மென்பொருட்களுக்கு இதுவே முன்னோடியாகத் திகழ்கிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Knuth, Donald E. (1986). The METAFONTbook. Addison-Wesley. ISBN 0-201-13445-4.
  2. Hobby, John D. (1986). "Smooth Curve Drawing". Discrete & Computational Geometry 1: 123–140. https://archive.org/details/sim_discrete-computational-geometry_1986_1_2/page/122. 
  3. Goossens, Michel (2007). The LaTeX Graphics Companion (2nd ed.). Addison-Wesley.
  4. Knuth, Donald E. (1986). Computer Modern Typefaces. Addison-Wesley. ISBN 0-201-13446-2.\
  5. 5.0 5.1 Christophe Grandsir. "METAFONT Tutorial".

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மெட்டாபான்டு&oldid=474464" இலிருந்து மீள்விக்கப்பட்டது