மேகம் மொழி
மேகம் மொழி (Megam language) என்பது வங்காளதேசத்தின் மைமன்சிங் பிரிவு, நெட்ரோகோனா மாவட்டம், கல்மகண்டா துணை மாவட்டம் ஆகியவற்றில் பேசப்படும் சீன-திபெத்திய மொழியின் ஒரு பகுதியான காரோ மலைகள் மற்றும் காசி மலைகளில் உள்ள காரோ வட்டார மொழிகளில் ஒன்றாகும். இது காரோவின் ஒரு துணை மொழியாகும், மேலும் காரோவுடன் நெருங்கிய தொடர்புடையது. இருப்பினும், இது காசிய மொழிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அண்டை காரோ வட்டார மொழியான ஆ'பீனிங்குடன் இது சொற்களஞ்சியத்தில் 7-9% மட்டுமே ஒத்திருக்கிறது, ஆனால் காசிய மொழியான லிங்ங்காமுடன் 60% ஒத்திருக்கிறது. லிங்ங்காம் மக்களும் மேகம் பழங்குடியினரின் ஒரு பகுதியினர் ஆவர். காசி மலைகளில் உள்ள லிங்ங்காம் மக்கள், காசி மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் நீண்டகாலத் தொடர்புக்குப் பிறகு, ஒரு காசி அடையாளத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
| மேகம் | |
|---|---|
| மேகம் | |
| மேகம் | |
| நாடு(கள்) | வங்காளதேசம் |
| பிராந்தியம் | மைமன்சிங் பிரிவு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (6,900 காட்டடப்பட்டது: 2000)[1] |
சீன-திபெத்திய
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | mef |
காரோ மொழியில் பல கிளைமொழிகள் உள்ளன. இவற்றுள் மேகம் கிளைமொழியும் ஒன்றாகும். சில மேகம் மக்கள் தங்களை ஒரு குலமாகவும் அடையாளப்படுத்திக் கொண்டு, மேகம் என்ற பெயரைத் தங்கள் குடும்பப் பெயராகப் பயன்படுத்துகின்றனர். மேகம் குலத்தினர் தங்கள் குடும்பப் பெயர்களை மேகம் சங்மா அல்லது மேகம் மோமின் என்று அடையாளப்படுத்துகின்றனர், இது பிராந்தியத்திற்குப் பிராந்தியம் வேறுபடுகிறது.