மைலா ஆஞ்சல் (Maila Aanchal) என்பது எழுத்தாளர் பனிசுவர் நாத் ரேணுவால் 1954ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஓர் இந்தி மொழிப் புதினம் ஆகும்.[1][2] பிரேம்சந்தின் கோதானுக்குப் பிறகு, இந்தி இலக்கிய மரபில் 'மைலா ஆஞ்சல்' மிக முக்கியமான இந்திப் புதினமாகக் கருதப்படுகிறது.[3][4] இந்தியில் "அஞ்சலிக் உபன்யாசு" வட்டாரமொழி வழக்கு புதின வகையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

மைலா ஆஞ்சல்
Maila Aanchal
நூலாசிரியர்பனிசுவர் நாத் ரேணு
உண்மையான தலைப்புमैला आँचल
(
மைலாஆஞ்சல்-The Soiled Border)
நாடுஇந்தியா
மொழிஇந்தி
வெளியிடப்பட்ட நாள்
1954
OCLC38470854
891.433
LC வகைஎம்.எல்.சி.எம் 91/07119

முக்கியத்துவம்

மைலா ஆஞ்சல், எழுத்தாளர் பனிசுவர் நாத் ரேணுவின் முதல் புதினம் ஆகும். இந்தப்புதினம் இந்திமொழி புதினங்களில் நிலவிய கதைசொல்லும் பாணிகளை அடியோடு மாற்றியமைத்ததுடன், இந்திப் புதினங்களின் கட்டமைப்பையும் மாற்றியது. இந்தியை ஒரு மொழியாகக் கற்பதற்குப் பங்களித்துள்ளது. மேலும் இந்திமொழி பாடத்திட்டத்தின் முக்கிய அங்கமாகவும் விளங்குகிறது.[5]

பின்னர் பனிசுவர் நாத் ரேணுவுக்கு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

உள்ளடக்கம்

மைலா ஆஞ்சல் புதினம் சமூகப்பிரச்சனையை மையப்படுத்திய ஒரு சமூகப் புதினமாகத் திகழ்கிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வடகிழக்கு பீகாரின் ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் சிறிய மக்கள் குழுவின் சோதனைகளையும் துன்பங்களையும் விவரிக்கிறது. அப்பகுதியின் முதல் மருத்துவரான டாக்டர்.அலக் நிரஞ்சனால் ஈர்க்கப்பட்டு, அக்காலத்தில் மக்களைக் கவனித்துக் கொண்ட ஓர் இளம் மருத்துவர் தக்தார் பாபு பற்றிய குறிப்பும் இதில் உள்ளது. [6] கிராமப்புற மக்களின் வட்டாரமொழி வழக்கு, வாழ்க்கை முறை, மூடநம்பிக்கைகள் மற்றும் நம்பிக்கைகள், பண்டிகைகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் மூலம் உள்ளூர் சாயல் இதில் பிரதிபலிக்கப்படுவதால், இந்நாவல் உண்மையான அர்த்தத்தில் ஒரு வட்டாரமொழி நாவலாகும். கதாபாத்திரங்கள் அந்தப் பகுதிக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. மேலும் இவை வட்டாரத்தின் குணாதிசயங்களால் வழிநடத்தப்படுகின்றன. அந்தப் பகுதி ஒரு உயிருள்ள கதாபாத்திரமாக மாறி, கதாபாத்திரங்களைப் பேரழிவிற்கு இட்டுச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

தழுவல்

இந்தப்புதினத்தின் தொலைக்காட்சித் தழுவலான 'மைலா ஆஞ்சல்', 1990ஆம் ஆண்டில் இந்திய தேசிய பொது ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்சன் தேசிய அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டது.[7]

மேற்கோள்கள்

  1. University of Delhi (2005). Indian Literature: An Introduction. Pearson Education India. pp. 194–. ISBN 978-81-317-0520-9.
  2. "Phanishwar Nath Renu". Archived from the original on 13 March 2008. Retrieved 24 October 2007.
  3. Rajendra Awasthi. Selected Hindi Short Stories. Diamond Pocket Books (P) Ltd. pp. 195–. ISBN 978-81-288-0287-4.
  4. renu at seasoninindia
  5. Phanishwar Nath Renu
  6. Maila Aanchal Literary Review
  7. "Original copy of "Maila Aanchal" authored by Phanishwar Nath 'Renu' stolen". United News of India. September 30, 2020.

வெளிப்புற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மைலா_ஆஞ்சல்&oldid=477841" இலிருந்து மீள்விக்கப்பட்டது