மதுகிரி சம்பிகே ராமையா (Mathikere Sampige Ramaiah பிறப்பு: ஏப்ரல் 20, 1922 - திசம்பர் 25, 1997) ஒரு கல்வியாளர், கொடையாளர், தொழிலதிபர் ஆவார். இவர், இந்தியாவில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஈடுபட்டார். [1] [2]

1972–1977 காலகட்டத்தில் கர்நாடகாவின் மேனாள் முதலமைச்சர் தேவ்ராஜ் அரசுடன்
ம. சு. ராமையா, கருநாடக ஆளுநர்குர்ஷித் ஆலம் கானுடன் 1991-1999

ஆரம்ப கால வாழ்க்கை

மதிகெரே சம்பங்கி ராமையா 20 ஏப்ரல் 1922 இல் மதுகிரியில் சம்பங்கப்பா - நரசம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பெங்களூரு நகரின் புறநகரில் இருந்த மதுகிரியில் ஆரம்பக் கல்வி பயின்றார். இந்திய ரயில்வேயில் மைசூரு நீராவித் தொடருந்தில் தீயணைப்பு வீரராக சுமார் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். [3]

இரண்டாம் உலகப் போரின்போது பெங்களூரில் உள்ள இராணுவ முகாம்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செங்கல் வழங்கினார். கட்டபிரபா திட்டத்தின் கால்வாய்கள், தலகலலே அணை , தர்மா திட்டம் போன்ற மாநிலத்தின் சில முக்கிய திட்டங்களில் பங்களித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். [4]

இதழியல்

1956 ஆம் ஆண்டில், மைசூர் மாநிலத்தின் பழமையான கன்னட நாளிதழான தாய்நாடுவை கையகப்படுத்தினார். கோகுலா என்ற கன்னட வார இதழையும், கைலாசா என்ற மாத இதழையும் தொடங்கினார்.

மேற்கோள்கள்

  1. Brett, Paul; Mason, Andrea (June 2017). From Bangalore to Brooklyn (in ஆங்கிலம்). Primedia E-launch LLC. ISBN 978-1-62209-013-6.
  2. Correspondent, Special (2022-04-22). "Special cover and Corporate My Stamp of Dr. Ramaiah released" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/special-cover-and-stamp-of-dr-ramaiah-released/article65345887.ece. 
  3. Service, Express News (2023-12-13). "Gadkari launches biography on Dr MS Ramaiah". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-01-23.
  4. "How M R Seetharam has created a legacy for MSRIT in the realm of education". Edex Live (in ஆங்கிலம்). Retrieved 2024-01-23.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ம._ச._ராமையா&oldid=454527" இலிருந்து மீள்விக்கப்பட்டது