யாரகல்லா (Yaragalla) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமமாகும்.[1][2]

யாரகல்லா
Yaragalla

அலாசாகர்

கிராமம்
யாரகல்லா Yaragalla is located in கருநாடகம்
யாரகல்லா Yaragalla
யாரகல்லா
Yaragalla
இந்தியாவின் கர்நாடகாவில் அமைவிடம்
யாரகல்லா Yaragalla is located in இந்தியா
யாரகல்லா Yaragalla
யாரகல்லா
Yaragalla
யாரகல்லா
Yaragalla (இந்தியா)
ஆள்கூறுகள்: 16°24′N 76°12′E / 16.40°N 76.20°E / 16.40; 76.20
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பீசப்பூர் மாவட்டம், கருநாடகம்
வட்டம் (தாலுகா)முத்தேபிகல், கருநாடகம்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,500
 • அடர்த்தி200/km2 (500/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீா் நேரம்)
பின்
586129
வாகனப் பதிவுகரு-28
அருகிலுள்ள நகரம்பீசப்பூர்,கருநாடகம்
பாலின விகிதம்60:40 /
எழுத்தறிவு70%
மக்களவை (இந்தியா) தொகுதிபீசப்பூர்
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிமுத்தேபிகல், கர்நாடகா
இந்தியாவின் தட்பவெப்ப நிலைவெப்பம் மற்றும் குளிர் (கோப்பென்)
இணையதளம்www.yaragalla.in

புவியியல்

கர்நாடகாவின் பீசப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தேபிகல் தாலுக்காவில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகமான பீசப்பூரில் இருந்து தோராயமாக 80 கி.மீ தொலைவில் உள்ளது. முத்தேபிகல் நகரத்திற்கு அருகில் உள்ள பல கிராமங்களில் இதுவும் ஒன்றாகும்.

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி யாரகல்லாவின் மக்கள் தொகை 1500 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் எண்ணிக்கை 800 ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 700 ஆகவும் இருந்தது. எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

யாரகல்லா கிராமத்தில் பல இந்து கோவில்கள் உள்ளன. சிறீ. கனமதேசுவர் கோவில், சிறீ அனுமான் கோவில், சிறீ கிடிகண்ணேசுவர மற்றும் சிறீ தாமவ்வ தேவி கோவில் ஆகியவை முக்கியமான சில கோயில்களாகும்.

சிறீ கிடிகண்ணேசுவர சாத்ரே விழா, சிறீ ஞானமாதேசுவர் புண்ய திதி, தாயம்மாவா தேவி திருவிழா, மொகரம், அனைத்து அமாவாசை, கார ஊன்னுமே நாகர பஞ்சமி, தீபாவளி, உகாதி, தசரா ஆகியவை கிராம மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.

பொருளாதாரம்

நிலப்பரப்பில் 80% நிலம் விவசாயத்திற்காக பயனபடுத்தப்படுகிறது. சோளம், கோதுமை, நிலக்கடலை, சூரியகாந்தி, பருத்தி மற்றும் கரும்பு ஆகியவை முக்கிய விளை பயிர்களான. கரும்பானது நீர்ப்பாசன கால்வாய்கள் அமைக்கப்பட்ட பிறகே பயிர் செய்யப் படுகிறது. இக் கிராமத்தின் நீர்பாசன ஆதாரங்களாக கால்வாய்கள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளன.

போக்குவரத்து

யாரகல்லா கிராமம் முக்கிய நகரமான முத்தேபிகல் மற்றும் அருகிலுள்ள பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கல்வி

இக்கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 150 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. Village code= 197900 "Census of India : Villages with population 1000 & above". Registrar General & Census Commissioner, India. Retrieved 2008-12-18.
  2. "Yahoomaps India". Retrieved 2008-12-18. Yaragalla, Bijapur, Karnataka

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=யாரகல்லா&oldid=479876" இலிருந்து மீள்விக்கப்பட்டது