யார்சானியம் (குர்தி மொழியில் یارسان), அஹ்லே ஹக்கு (Kurdish: ئەهلی حەق, romanized: Ehlî Ḧeq;[4][5] பாரசீகம்: اهل حق), அல்லது கக்கயி[3] என்பது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலை ஈரானில் சுல்தான் சகாக்கினால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மரபுரிமையான, சமய ஒத்திசைவுச் சமயம் ஆகும்.[6] ஈரானில் யார்சானியச் சமயத்தைப் பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை அரை மில்லியனுக்கு மேல்[1] என்பதிலிருந்து ஒரு மில்லியன் என்பது வரை கணக்கிடப்படுகிறது.[2] ஈராக்கிலுள்ள தொகையினர் அறியப்படவில்லை. இதனைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் குரான், சஞ்சாபி, கல்கோர், சங்கனா, ஜலாலியந்துக் கூட்டத்தினர் ஆகியோரும்,[1] அங்ஙனமே சில சபக்குகளும்,[7] இலாக்குகளும், உலுர்களும் ஆவர்.[8]

யார்சானியம்
یارسان
[[Image:|200px|]]
இராக்கில் மோசுல் நகருக்கு அருகிலுள்ள வர்திக்குக் கிராமத்திலுள்ள சாகு கயாசின் யார்சானியப் புனிதத் தலம்
வகைப்பாடு ஈரானிய, ஆபிரகாமிய
இறையியல் சமய ஒத்திசைவு
புவியியல் பிரதேசம் ஈராக்கியக் குர்தித்தான், ஈரானியக் குர்தித்தான்
நிறுவனர் சுல்தான் சகாக்கு
ஆரம்பம் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
மேலை ஈரான்
உறுப்பினர்கள் ஈரானில் அண். 500,000[1] முதல் 1,000,000 வரை[2]
வேறு பெயர்(கள்) அஹ்லே ஹக்கு, கக்கயி[3]
  1. 1.0 1.1 1.2 Hamzeh'ee (1990), ப. 39.
  2. 2.0 2.1 Encyclopedia of the Modern Middle East and North Africa (Detroit: Thomson Gale, 2004) p. 82
  3. 3.0 3.1 "'If we stay a secret, there will be a genocide'". BBC News. https://www.bbc.com/news/av/world-middle-east-48301954. 
  4. Hamzeh'ee, M. Reza Fariborz (1995). Krisztina Kehl-Bodrogi; et al. (eds.). Syncretistic Religious Communities in the Near East. Leiden: Brill. pp. 101–117. ISBN 90-04-10861-0.
  5. P. G. Kreyenbroek (1992). Review of The Yaresan: A Sociological, Historical and Religio-Historical Study of a Kurdish Community, by M. Reza Hamzeh'ee, 1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-922968-83-X. Bulletin of the School of Oriental and African Studies, University of London, Vol.55, No.3, pp.565–566.
  6. Elahi, Bahram (1987). The path of perfection, the spiritual teachings of Master Nur Ali Elahi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-0200-3.
  7. Religious Minorities in Iraq: Co-Existence, Faith and Recovery After ISIS, Maria Rita Corticelli, 2022, pp. 130, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780755641352
  8. God First and Last: Religious Traditions and Music of the Yaresan of Guran: Volume 1: Religious Traditions by Philip G. Kreyenbroek, 2020, pp. 33
"https://tamilar.wiki/w/index.php?title=யார்சானியம்&oldid=486663" இலிருந்து மீள்விக்கப்பட்டது