யூக்சனைட்டு
யூக்சனைட்டு (Euxenite) என்பது (Y,Ca,Ce,U,Th)(Nb,Ta,Ti)2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். யூக்சனைட்டு-(Y) என்ற பெயராலும் அறியப்படுகிறது. உலோகப் பளபளப்புடன் கூடிய பழுப்பும் கருப்பு நிறமும் கலந்த கனிமமாகும்.
| யூக்சனைட்டு Euxenite | |
|---|---|
நோர்வே நாட்டில் கிடைத்த யூக்சனைட்டு, 11 செ.மீ அளவு கொண்டது | |
| பொதுவானாவை | |
| வகை | ஆக்சைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | (Y,Ca,Ce,U,Th)(Nb,Ta,Ti) 2O 6 |
| இனங்காணல் | |
| நிறம் | கருப்பு, பழுப்பு கருப்பு,பச்சை கருப்பு |
| படிக இயல்பு | அணியில் மிகப்பெரிய, முகமற்ற படிகங்கள் |
| படிக அமைப்பு | செஞ்சாய் சதுரம் |
| இரட்டைப் படிகமுறல் | பொதுவாக [201] இல் |
| பிளப்பு | இல்லை |
| முறிவு | சங்குருவம் |
| மோவின் அளவுகோல் வலிமை | 5.5 to 6.5 |
| மிளிர்வு | பளபளப்பான துணை உலோகம், மெழுகுத்தன்மையும் பிசின் போன்றதும் |
| கீற்றுவண்ணம் | மஞ்சள், சாம்பல், அல்லது செம்பழுப்பு |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது, விளிம்புகளில் ஒளி கசியும் |
| ஒப்படர்த்தி | 4.7 to 5 |
| ஒளியியல் பண்புகள் | திசைச்சீர் கொண்டது |
| ஒளிவிலகல் எண் | n = 2.06 – 2.24 |
| பிற சிறப்பியல்புகள் | மாறிநிலை – அசலாக படிகம், தற்பொழுது கதிரியக்கம் காரணமாக படிக உருவமற்றது. |
| மேற்கோள்கள் | [1][2][3] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் யூக்சனைட்டு கனிமத்தை Eux[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
வேதியியல்
யூக்சனைட்டு கனிமத்தில் கால்சியம், நையோபியம், தாண்டலம், சீரியம், தைட்டானியம், இட்ரியம், யுரேனியம் மற்றும் தோரியம் ஆகிய தனிமங்களுடன் வேறு சில உலோகங்களும் உள்ளன. கதிர்வீச்சு சேதம் காரணமாக யூக்சனைட்டு கனிமம் பொதுவாக பகுதியளவு உருவமற்றதாக இருக்கும்.
யூக்சனைட்டு கனிமம் தைட்டானியம் நிறைந்த பாலிகிரேசு-(Y) உடன் (Y,Ca,Ce,U,Th)(Ti,Nb,Ta) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு தொடர்ச்சியான தொடரை உருவாக்குகிறது.
கண்டுபிடிப்பு
முதன்முதலில் யூக்சனைட்டு கனிமம் 1870 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. அந்நியர்களிடம் விருந்தோம்பல் அல்லது நட்பு என்பதைக் குறிக்கும் கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து யூக்சனைட்டு எனப் பெயரிடப்பட்டது. கனிமத்தில் உள்ள பல அரிய ஒன்றாக இணைந்திருப்பதை இப்பெயல் சுட்டிக் காட்டுகிறது.[3][2]
தோற்றம்
கிராணைட்டு தீப்பாறைகள் மற்றும் தேய்வுப்படிவு கருப்பு மணலில் யூக்சனைட்டு காணப்படுகிறது.[1]
உலகளவில் பல இடங்களில் இக்கனிமம் காணப்படுகிறது, குறிப்பாக நோர்வே நாட்டில் இக்கனிமம் கிடைக்கிறது. உருசியாவின் உரால் மலைகள்; சுவீடன்; மினாசு செராய்சு, பிரேசில்; அம்பாங்கபே, மடகாசுகர்; ஒன்றாரியோ, கனடா மற்றும் அரிசோனா, வயோமிங்கு மற்றும் அமெரிக்காவில் கொலராடோ ஆகிய இடங்களிலும் யூக்சனைட்டு கிடைக்கிறது.[5]
பயன்கள்
யூக்சனைட்டு கனிமம் அதில் உள்ள அருமண் தனிமங்களின் தாதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. நகைத் தொழிலிலும் அரிய பெரிய படிகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.[5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 http://rruff.geo.arizona.edu/doclib/hom/euxenitey.pdf Minderal Handbook
- ↑ 2.0 2.1 http://webmineral.com/data/Euxenite-(Y).shtml Webmineral data
- ↑ 3.0 3.1 http://www.mindat.org/min-1425.html Mindat
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ 5.0 5.1 http://www.galleries.com/minerals/oxides/euxenite/euxenite.htm Mineral Galleries