ரவுல் பிக்டே
ரவுல்-பியேர் பிக்டே (Raoul-Pierre Pictet, 4 ஏப்ரல் 1846 – 27 சூலை 1929) என்பவர் சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆவார். இவரே முதன் முறையாக நைதரசனை வெற்றிகரமாகத் திரவமாக்கியவர்.
| ராவுல்-பியேர் பிக்டே Raoul-Pierre Pictet | |
|---|---|
| படிமம்:Pictet Raoul.jpg | |
| பிறப்பு | ஏப்ரல் 4, 1846 ஜெனீவா |
| இறப்பு | 27 சூலை 1929 (அகவை 83) பாரிஸ் |
| தேசியம் | சுவிட்சர்லாந்து |
| துறை | இயற்பியல் |
| பணியிடங்கள் | ஜெனீவா பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | திரவ நைதரன் |
| விருதுகள் | டேவி விருது (1878) |
| கையொப்பம் | |
வாழ்க்கைச் சுருக்கம்
ஜெனீவாவில் பிறந்த பிக்டே ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் குறைந்த வெப்பநிலைகளைப் பெறுதலிலும், வளிமங்களைத் திரவமாக்குவதிலும், திண்மமாக்குவதிலும் இருந்தன.[1]
1877 டிசம்பர் 22 இல், பாரிசில் உள்ள அறிவியல் கழகத்திற்கு ஜெனீவாவில் இருந்து பிக்டே அனுப்பியிருந்த ஒரு தந்தியில் பின்வருமாறு குறிக்கப்பட்டிருந்தது: சல்பூரசு மற்றும் கார்போனிக் காடிகளைப் பயன்படுத்தி 320 வளிமண்டல அழுத்தத்திலும், 140 பாகை குளிரிலும் இன்று ஆக்சிசன் திரவமாக்கப்பட்டது. இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட அதே காலகட்டத்தில் பிரான்சைச் சேர்ந்த லூயி பால் காயில்டேட் என்பவர் முற்றிலும் வேறான முறையொன்றில் ஆக்சிசனைத் திரவமாக்கியிருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ Sloan, T. O'Connor (1920). Liquid Air and the Liquefaction of Gases. New York: Norman W. Henley. pp. 152–171.