ரெனே கராபாஷ் (Rene Karabash, பல்காரியம்: Рене Карабаш ) என்ற புனைபெயரில் பரவலாக அறியப்படும் ஐரினா இவனோவா என்பவர் ஒரு பல்கேரிய எழுத்தாளரும், நடிகையும் ஆவார். இவரது படைப்புகள் பல பல்கேரிய இலக்கிய விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, பல விருதுகளையும் பெற்றுள்ளன. 2026-ல், இவரது ' She Who Remains ' என்ற புதினம் பன்னாட்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது.

ரெனே கராபாஷ்
பிறந்ததிகதி 1989 (அகவை 36–37)
பிறந்தஇடம் லெக்சாண்ட்ரோவோ, லோவெச் நகராட்சி, பல்கேரியா
கல்வி நிலையம் புதிய பல்கேரியப் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள் She Who Remains

வாழ்க்கையும் தொழிலும்

ஐரினா ஹிரிஸ்டோவா இவனோவா 1989 இல் லோவெச் நகராட்சியில் உள்ள அலெக்சாண்ட்ரோவோ கிராமத்தில் பிறந்தார். இவர் லோவெச்சில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, வெலிகோ தர்னோவோ பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மற்றும் ஆங்கில பயன்பாட்டு மொழியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஆங்கர்சில் உள்ள மேற்கத்திய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இலக்கியம் பயின்றார், மேலும் புதிய பல்கேரிய பல்கலைக்கழகத்தில் திரைப்பட இயக்கத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவரது புனைபெயர் இவரது தாயின் திருமணத்திற்கு முந்தைய பெயரையும், பிரான்சில் இவருக்கு கிடைத்த "ரெனி" என்ற செல்லப் பெயரையும் இணைத்து உருவாக்கப்பட்டது. [1]

லொகார்னோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட காட்லெஸ் திரைப்படத்தில் கானா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இவரது நடிப்பிற்காக, சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். [1] மேலும் ஸ்டாக்ஹோம் திரைப்பட விழா, ஹார்ட் ஆஃப் சரஜேவோ , கோல்டன் ரோஸ் ஆகியவற்றிலும் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார். [2]

2021 ஆம் ஆண்டில், கரபாஷ், Писма на Омар до бъдещата му съпруга (ஓமர் தன் வருங்கால மனைவிக்கு எழுதிய கடிதங்கள்) என்ற தலைப்பிலான, கடித வடிவிலான சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். [3] [4] இவர் கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். [5] இவர் பல்கேரியாவில் உள்ள 'தி ராபிட் ஹோல்' எனும் படைப்பிலக்கியப் பயிற்சி மையத்தின் நிறுவனராகவும் இவர் திகழ்கிறார். ஜார்ஜி கோஸ்போடினோவ், ஜார்ஜி பர்தரோவ் மற்றும் விக்டோரியா பெஷ்லிஸ்கா போன்ற எழுத்தாளர்கள் இவ்வமைப்பில் பணியாற்றியுள்ளனர். [5]

எஞ்சி இருக்கும் அவள்

2018-ல், கரபாஷ் தனது முதல் புதினமான எஞ்சி இருக்கும் அவள் ( She Who Remains , பல்காரியம்: Остайница, romanized: Ostaynitsa ) என்பதை வெளியிட்டார். இது அல்பெனியாவில் இன்றும் நடைமுறையில் இருக்கும் கன்னிச் சபதம் என்னும் விசித்திரமான நடைமுறை பற்றியதாகும். இந்தப் படைப்பைப் பற்றி, கரபாஷ், ஆணாதிக்க சமூகத்தின் வன்முறையைப் பற்றி எழுத விரும்புவதாகக் கூறினார். இவர் இந்தப் புத்தகத்திற்காக இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்தார். இஸ்மாயில் கடாரே எழுதிய புரோக்கன் ஏப்ரல்' உள்ளிட்ட புத்தகங்கள் மற்றும் கன்னிச் சபதம் செய்த பெண்களுடனான நேர்காணல்கள் இவரது முதன்மை சான்றுகளாக இருந்தன. இவர் அல்பேனியாவுக்குப் பயணம் செய்யவில்லை என்றாலும், இவரது யதார்த்தமான சித்தரிப்பு, சோபியா பல்கலைக்கழகத்தில் உள்ள அல்பேனிய நிபுணர்களை இவர் அந்த நாட்டிற்குச் சென்றதாக நம்ப வைத்தது என்று இவர் கூறினார். [6]

2026 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த புதினம் 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இசிடோரா ஏஞ்சல் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பு 2026 இல் பைரீன் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலும் 2026 பன்னாட்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. [7] ஏஞ்சல் தனது ஷீ ஹூ ரிமெயின்ஸ் படைப்பிற்காக 2023 வளைகுடா கடற்கரை மொழிபெயர்ப்பு பரிசை பெற்றார். [5] அவர் இந்த புதினத்தை "கட்டமைப்பு ரீதியாக புதுமையானது" மற்றும் "கருப்பொருள் ரீதியாக பிரமிக்க வைப்பது" என்று விவரித்தார். மேலும் பல்கேரிய இலக்கியம் ஓரினச்சேர்க்கை கருப்பொருள்களை அரிதாகவே கையாளுகிறது என்றும் குறிப்பிட்டார். அப்போலோனிய விழாவில் இந்த புதினம் அறிமுகப்படுத்தபட்டபோது, ஒரு மதிப்பீட்டாளர் இதை "பல்கேரியாவின் முதல் தீவிரமான ஓரினச்சேர்க்கை புதினம்" என்று குறிப்பிட்டார். [8]

படைப்புகள்

  • Хлъбоци и пеперуди (இடுப்புகளும் வண்ணத்துப்பூச்சிகளும்) - 2014 [1]
  • Остайница (எஞ்சி இருக்கும் அவள்) - 2018
  • Братовчедката на Зорбас (Zorbas' Cousin) - 2020 [9]
  • Писма на Омар до бъдещата му съпруга (ஓமர் தன் வருங்கால மனைவிக்கு எழுதிய கடிதங்கள்) - 2021 [10]
  • Някой ме вика по име (யாரோ என் பெயரைச் சொல்லி அழைக்கிறார்கள்) - 2026 [11]

கௌரவங்கள்

  • 2015-ஆம் ஆண்டின் இடுப்புகளும் வண்ணத்துப்பூச்சிகளும் படைப்பிற்காக, இவான் நிகோலோவ் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் [12]
  • எஞ்சி இருக்கும் அவள், நூலுக்காக 2019-ஆம் ஆண்டில் எலியாஸ் கானெட்டி பரிசு வழங்கப்பட்டது. [13]
  • 2023-ஆம் ஆண்டில் எஞ்சி இருக்கும் அவள் நூலுக்காக பி.ஈ.என். கிளப் பிரான்சிசின் மொழிபெயர்ப்புப் பரிசு வழங்கப்பட்டது. [14] [15]
  • எஞ்சி இருக்கும் அவள் நூலுக்காக 2026-ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுக்குத் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Mayer, Miroslav (23 May 2024). "В ръкавиците на Рене Карабаш" [In the gloves of Rene Karabash]. போர்ப்ஸ் Bulgaria (in பல்கேரியன்). Retrieved 25 February 2026.
  2. "Stockholm International Film Festival". www.stockholmfilmfestival.se (in ஸ்வீடிஷ்). Retrieved 25 February 2026.
  3. "Rene Karabash". The Booker Prizes. Retrieved 26 February 2026.
  4. "Omar's Letters to his Future Wife". Sofia Literary Agency. Retrieved 26 February 2026.
  5. 5.0 5.1 5.2 "Excerpt from Rene Karabash's She Who Remains Winner of the 2023 Translation Prize". Gulf Coast. Retrieved 26 February 2026.
  6. "Bulgarian literature: Power, Violence, Trauma". Balkan Talks. March 2024. Retrieved 26 February 2026.
  7. "She Who Remains". The Booker Prizes. Retrieved 26 February 2026.
  8. "She Who Translates: Stiliana Milkova Rousseva in Conversation with Translator and Writer Izidora Angel". Reading in Translation. 22 September 2025. Retrieved 26 February 2026.
  9. "Братовчедката на Зорбас - новата книга на Рене Карабаш" [Zorbas' Cousin: the new book by Rene Karabash]. Bulgarian National Television (in பல்கேரியன்). Retrieved 25 February 2026.
  10. ""Писма на Омар до бъдещата му съпруга" е новата нестандартна книга на писателката, поет и актриса Рене Карабаш" ["Omar's Letters to His Future Wife" is the new unusual book by the writer, poet and actress Rene Karabash]. impresario.dir.bg (in பல்கேரியன்). Retrieved 25 February 2026.
  11. "Новата стихосбирка на Рене Карабаш е опит да се слееш с другия, но и да останеш при себе си" (in bg). https://www.bta.bg/bg/news/lik/1068877-novata-stihosbirka-na-rene-karabash-e-opit-da-se-sleesh-s-drugiya-no-i-da-ostan. 
  12. "Национална награда за поезия "Иван Николов"" (in bg). Bulgarian National Television. https://bnt.bg/bg/a/natsionalna-nagrada-za-poeziya-ivan-nikolov. 
  13. "Писателката Рене Карабаш е носителка на националната награда "Елиас Канети" в Русе" (in bg). Bulgarian News Agency. https://www.bta.bg/bg/news/bulgaria/75213-Pisatelkata-Rene-Karabash-e-nositelka-na-natsionalnata-nagrada-Elias-Kaneti-v#%D0%B5%D0%BB%D0%B8%D0%B0%D1%81%20%D0%BA%D0%B0%D0%BD%D0%B5%D1%82%D0%B8. 
  14. "Les Prix de Traduction – Pen Club Français". PEN Club Français (in பிரெஞ்சு). Retrieved 25 February 2026.
  15. "International recognition for translations of She Who Remains". Bulgarian National Radio (in ஆங்கிலம்). Retrieved 25 February 2026.
"https://tamilar.wiki/w/index.php?title=ரெனே_கராபாஷ்&oldid=485261" இலிருந்து மீள்விக்கப்பட்டது