ரெய்க்யவிக்
ரெய்க்யவிக் (ஆங்கிலம்: Reykjavík), ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வட அகலாங்கு 64°08' இல் அமைந்துள்ள இந்நகரமே உலகத்தின் வட துருவத்திற்கு அண்மையிலுள்ள தலைநகரமாகும். இது ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் பக்சஃப்லோய் விரிகுடாவின் தென் கரையில் அமைந்துள்ளது. ஐஸ்லாந்தின் பொருளாதார அரசியல் மையமாக உள்ள இந்நகரின் மக்கட்தொகை ஏறத்தாழ 120,000 ஆகும்.
ரெய்க்யவிக் Reykjavíkurborg[1] | |
|---|---|
| நாடு | |
| தேர்தல் தொகுதி | ரெய்க்யவிக் வடக்கு ரெய்க்யவிக் தெற்கு |
| அரசு | |
| • மேயர் (Borgarstjóri) | ஜோன் ஞார் (Jón Gnarr) |
| பரப்பளவு | |
| • நகரம் | 274.5 km2 (106 sq mi) |
| • மாநகரம் | 777 km2 (300 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • நகரம் | 1,19,108 |
| • அடர்த்தி | 436.5/km2 (1,131/sq mi) |
| • பெருநகர் | 2,02,341 |
| • பெருநகர் அடர்த்தி | 259.4/km2 (672/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+0 (ஒ.ச.நே.) |
| இணையதளம் | http://www.rvk.is/ |
| அஞ்சல் குறியீடு: 101-155 | |
மேற்கோள்கள்
- ↑ Referred to the "City of Reykjavík"