லலித் ஜெ. ராவ்
லலித் ஜெ. ராவ் (Lalith J. Rao) இந்திய செவ்வியல் இசைப் பாடகராக அறியப்படுகிறார். இவர் ஆக்ரா கரானா பாடல் மரபின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
| லலித் ஜே. ராவ் | |
|---|---|
| படிமம்:Lalit.J.Rao.jpg 2013ல் ராவ் | |
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | லலித் ராவ் |
| பிறப்பு | 6 நவம்பர் 1942 |
| பிறப்பிடம் | பெங்களூரு, கர்நாடகா, இந்தியா |
| இசை வடிவங்கள் | இந்திய செவ்வியல் இசை |
| தொழில்(கள்) | பொறியாளர், பாடகர் |
ஆரம்ப கால வாழ்க்கை
லலித் ஜெ. ராவ் மூன்று வயதில் ஆக்ரா கரானா பாடகர் ஃபையாஸ் கான் அவர்களின் இசை நிகழ்ச்சியை கேட்டதன் மூலம் செவ்வியல் இசையில் அறிமுகமானார். பின்னர் ராமா ராவ் நாயக் அவர்களிடம் இசைப் பயிற்சி பெற்று ஆக்ரா கரானா இசை மரபில் பயின்றார்.12 வயதில் பெங்களூரு சங்கீத சபாவில் தனது முதல் பொதுமக்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.[1] 14 வயதில் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய செவ்வியல் இசைப் போட்டியில் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் சுவாமி ஹரிதாஸ் சங்கீத சம்மேளனத்தில் பங்கேற்ற இளைய கலைஞராகவும் அறியப்பட்டார்.இவர் மின்தொடர்பு பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை பெற்றார். முதுகலைப் பட்டத்தை நியூ பிரன்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் பெற்றார். 1967 ஆம் ஆண்டு ஜெயவந்த் ராவை திருமணம் செய்து கொண்டு தில்லிக்கு குடிபெயர்ந்து பணியில் சேர்ந்தார். பின்னர் இவரது கணவரின் ஊக்கத்தால் பொறியியல் பணியை விட்டு முழுமையாக இசைத்துறையில் ஈடுபட்டார். அதன்பின் தின்கர் கைகினி மற்றும் கதிம் உசேன் கான் ஆகியோரிடம் மேம்பட்ட இசைப் பயிற்சி பெற்றார்.[2]
தொழில் வாழ்க்கை
லலித் ஜெ. ராவ் பின்னர் சுர் சிங்கார் சன்சத் அமைப்பின் மூலம் மீண்டும் இசை நிகழ்ச்சிகளைத் தொடங்கி முழுநேர தொழில்முறை பாடகராக உயர்ந்தார். கயால், திருபத், தமார், தும்ரி, தரானா மற்றும் ஹோரி போன்ற பல இசை வடிவங்களில் திறமையாகப் பாடுபவராக அறியப்படுகிறார்.1981 ஆம் ஆண்டு முதல் முறையாக வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தினார். பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். மேலும் அகில இந்திய வானொலியின் உயர்தர கலைஞராகவும் அறியப்படுகிறார். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.எழுபதுகளின் நடுப்பகுதியில் தனது ஆசானின் இசையைப் பரப்புவதற்காக சஜன் மிலாப் என்ற அறக்கட்டளையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இவரது ஆசான் சஜன் பியா என்ற புனைபெயரை பயன்படுத்தியவர்.1989 முதல் 1991 வரை ஐ.டி.சி சங்கீத ஆராய்ச்சி கல்விக்கழகத்தில் நடைபெற்ற இசை ஆவணப்படுத்தும் முயற்சிக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். [3] பின்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக இசியலாய்வு துறைக்காகவும் ஆக்ரா கரானா இசை மரபைப் பதிவு செய்ய பாடினார்.[4][5] தற்போது பெங்களூரில் வசித்து இசை கற்பித்து வருகிறார். இவரது குறிப்பிடத்தக்க மாணவர்களில் பாரதி பிரதாப், மனோஹர் பட்வர்தன், கைலாஷ் குல்கர்னி மற்றும் பிரதிமா பெல்லாவே ஆகியோர் அடங்குவர்.
குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகள்
- சவாய் கந்தர்வ பீம்சேன் மகோற்சவ் — புனே, ஹூப்ளி, குந்த்கோல்
- ஐ.டி.சி – எஸ்.ஆர்.ஏ சங்கீத சம்மேளனம் — புதிய தில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் பிற இடங்கள்
- தான்சேன் சமாரோஹ் — குவாலியர்
- விஷ்ணு திகம்பர் ஜெயந்தி விழா — தில்லி
- சுவாமி ஹரிதாஸ் சங்கீத சம்மேளனம் — மும்பை, தில்லி, மதுரா, விரிந்தாவன்
- குணிதாஸ் சங்கீத சம்மேளனம் — மும்பை, தில்லி, பெங்களூர்
- இந்தியா முழுவதும் இசை வட்டங்கள் மற்றும் சங்கீத சபைகள்
- அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் பல வெற்றிகரமான இசை சுற்றுப்பயணங்கள்
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
- குருமா அன்னபூர்ணா தேவி விருது — அன்னபூர்ணா தேவி அறக்கட்டளை, 2024
- சங்கீத நாடக அகாதெமி விருது — இந்திய அரசு, 2018
- கர்நாடக இராஜ்யோத்ஸவ பிரசஸ்தி — கர்நாடக அரசு, 2017
- கர்நாடக சங்கீத நடன கல்விக்கழக கௌரவ புரஸ்கார்
- கர்நாடக கலாஶ்ரீ — கர்நாடக அரசு, 2011–2012
- தனா ரிரி விருது — குஜராத் மாநில சங்கீத நாடக அகாதெமி, வாழ்நாள் சாதனை, 2016
- நிஷாகந்தி புரஸ்காரம் — கேரள அரசு, 2014
- சுர் மணி — சுர் சிங்கார் சன்சத்
- வாழ்நாள் சாதனையாளர் விருது — பெங்களூர் காயன சமாஜா
- வாழ்நாள் சாதனையாளர் விருது — புத்தராஜ் சம்மான்
- பி.கே.எப் மல்லிகார்ஜுன மன்சூர் விருது, 2014
- இந்துஸ்தானி செவ்வியல் இசைக்கான வாழ்நாள் சாதனை “கானகலா தபஸ்வினி” — ஸ்ரீமத் வாதிராஜ ஆராதனா அறக்கட்டளை, 2016
- ஸ்வரதபஸ்வி — ஸ்வர சங்குலா, மைசூர்
பகுதி இசைப் பதிவுகள்
- பிஹாக்; கேதார்; தும்ரி (1986)
- பியாண்ட் ரீச்: துர்கா மற்றும் பிலு இராகங்கள் (2003)
- தர்பாரி கனடா, தேஷ் இராகங்கள் (2006)
- லலித் இராகம் (2002)
- கல்யாண் நாட் மற்றும் அடானா இராகங்கள் (2002)
- ஸ்ரீ இராகம் (2013)
- தனாஷ்ரீ மற்றும் பர்வா இராகங்கள் (2013)
- கோரக் கல்யாண் மற்றும் பசந்த் இராகங்கள் (2013)
மேற்கோள்கள்
- ↑ Lochan, Pramila (1 December 2002). "The new beginning". Deccan Herald. Archived from the original on 24 June 2003. Retrieved 30 March 2026.
- ↑ "Biography (ITC SRA)". itcsra.org இம் மூலத்தில் இருந்து 15 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110615003824/http://www.itcsra.org/aspfiles/personwindow.asp?personid=223. பார்த்த நாள்: 2009-08-30.
- ↑ "Story of ITC SRA:Ford Foundation Project". itcsra.org இம் மூலத்தில் இருந்து 22 November 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20011122163326/http://itcsra.org/sra_story/sra_story_research/sra_story_resrch_links/sra_story_resrch_ford/sra_story_resrch_ford_index.html. பார்த்த நாள்: 2009-09-01.
- ↑ "Lalith Rao 1981". washington.edu இம் மூலத்தில் இருந்து 20 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110720113333/http://www.music.washington.edu/ethno/php/ethno_archive_detail.php?ID=1981010. பார்த்த நாள்: 2009-08-30.
- ↑ "Lalith Rao 1985". washington.edu இம் மூலத்தில் இருந்து 20 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110720113410/http://www.music.washington.edu/ethno/php/ethno_archive_detail.php?ID=1985025. பார்த்த நாள்: 2009-08-30.
வெளி இணைப்புகள்