லவணாசுரன்
இலவனசுரன் (Lavana) ({{சமசுகிருதம்]]:लवणासुर]], இராமாயணம் காவியத்தில் கூறப்படும் அசுரன் லவனாசுரனை, இராமனின் கடைசித் தம்பியான சத்துருக்கன் போரில் கொல்கிறார்.[1]
| லவனாசுரன் | |
|---|---|
சத்துருக்கன் லவணாசுரனை வதம் செய்தல் | |
| வகை | அசுரர் |
| பெற்றோர்கள் | மது-கும்பிநாசி |
| நூல்கள் | இராமாயணம் |
தொன்ம வரலாறு
இராவனை வென்ற இராமன் அயோத்தியை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்கையில், மதுபுரி எனும் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த லவனாசுரன் எனும் அசுரன், முனிர்களையும், அவர்கள் செய்கின்ற யாகங்களையும் அழித்துக் கொண்டிருந்தான். இக்கொடுஞ்செயல்களை சியவனர் தலைமையிலான முனிவர்கள் இராமரிடம் முறையிட்டனர்.
இராமர் சத்துருக்கணனை லவனாசுரனை வதைக்க அனுப்பி வைத்தார். சத்துருக்கணன் பெரும்படையுடன், லவனாசுரனை அழிக்கப் புறப்பட்டார். லவனாசுரனை சத்துருக்கன் போரில் அழைத்தார். சத்துருக்கன் லவனாசுரனின் மார்பில் அம்பை பாய்ச்சிக் கொன்றார். இதனால் இறந்த லவனாசுரனின் நாட்டிற்கு சத்துருக்கனை ஆட்சியாளராக நியமித்து இராமர் பட்டம் சூட்டினார்.[2]
மேற்கோள்கள்
- ↑ www.wisdomlib.org (2020-05-26). "Lavanasura, Lavaṇāsura: 2 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-11-06.
- ↑ Bane, Theresa (2014-01-10). Encyclopedia of Demons in World Religions and Cultures (in ஆங்கிலம்). McFarland. p. 201. ISBN 978-0-7864-8894-0.