லேதா மனசலு
லேதா மனசலு (தெலுங்கு: లేత మనసులు)[1] என்பது 2004-ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தெலுங்கு மொழிக் காதல் நாடகத் திரைப்படமாகும். இதனை எஸ். வி. கிருஷ்ண ரெட்டி இயக்கியுள்ளார். வல்லபனேனி பாலசூரி, எம். ஆனந்த வர்மா ஆகியோர் தயாரித்துள்ளனர். இதில் ஸ்ரீகாந்த், கல்யாணி , கோபிகா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2002-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான அழகியின் மறுஉருவாக்கமாகும். எம். எம். கீரவாணி இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அக்டோபர் 1, 2024இல் வெளியானது.[2]
| லேதா மனசులు | |
|---|---|
| இயக்கம் | எஸ். வி. கிருஷ்ண ரெட்டி |
| தயாரிப்பு | வல்லபனேனி பாலசூரிஎம். ஆனந்த வர்மா |
| கதை | சிந்தப்பள்ளி ரமணா (வசனம்) |
| திரைக்கதை | எஸ். வி. கிருஷ்ண ரெட்டி |
| இசை | எம். எம். கீரவாணி |
| நடிப்பு | ஸ்ரீகாந்த் , கல்யாணி, கோபிகா |
| ஒளிப்பதிவு | கான்டேட்டி சங்கர் |
| படத்தொகுப்பு | முத்தியால நானி |
| கலையகம் | ஸ்ரீ சிவசாய் பிக்சர்ஸ் |
| வெளியீடு | 1 அக்டோபர் 2004 |
| ஓட்டம் | 149 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
கதை
ராஜூ, தனலட்சுமி சிறு வயதிலிருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து வளர்கிறார்கள். ஆனால் குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் இருவரும் வேறு வேறு வாழ்க்கைப் பாதைகளில் செல்கின்றனர். பின்னர் ராஜூ, பானு என்ற பெண்ணை திருமணம் செய்து நகரத்தில் குடும்ப வாழ்க்கை நடத்துகிறார். தனலட்சுமியும் திருமணம் செய்து கொள்கிறாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு தனலட்சுமியின் கணவர் இறந்துவிடுகிறார். வாழ்க்கையில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவளை மீண்டும் சந்திக்கும் ராஜூ, இரக்கத்தால் தனது வீட்டில் வேலைக்காரியாக தங்க வைக்கிறார். ஆனால் அவர்களுக்குள் இருந்த பழைய காதல் நினைவுகள் மீண்டும் மேலெழத் தொடங்குகின்றன.
ராஜூவின் மனைவி பானுவிற்கு, ராஜூ , தனலட்சுமியின் கடந்தகால உறவு தெரியாமல் இருப்பதால் பல தவறான புரிதல்கள் உருவாகின்றன. குடும்ப உறவுகள், பழைய காதல், தியாகம் , மனித உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இறுதியில் அனைவரும் உண்மையை புரிந்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் கதை நிறைவடைகிறது.
நடிகர்கள்
- ஸ்ரீகாந்த் — ராஜூ
- கல்யாணி — தனலட்சுமி
- கோபிகா — பானு
- சுனில்
- பிரகாஷ் ராஜ்
- எம். எஸ். நாராயணா
- தர்மவரப்பு சுப்பிரமணியம்
இசை
இத்திரைப்படத்தின் இசையை எம். எம். கீரவாணி அமைத்துள்ளார்.[3] பாடல்கள் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றன.
மேற்கோள்கள்
- ↑ "Leta Manasulu Review". Full Hyderabad. 7 October 2004. Archived from the original on 27 January 2022. Retrieved 31 January 2022.
- ↑ "Movie review — Letha Manasulu". Idlebrain.com. 1 October 2004. Archived from the original on 27 January 2022. Retrieved 31 January 2022.
- ↑ "Letha Manasulu". JioSaavn. January 2013. Archived from the original on 1 February 2022. Retrieved 31 January 2022.