லோசான்
லோசான் (Lausanne, loˈzan) சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழிப் பேசும் பகுதியில் உள்ள ரோமண்டியில் உள்ள ஓர் நகரமாகும். வாட் கன்டனின் தலைநகரமும் ஆகும். லோசான் மாவட்டத் தலைநகரும் இதுவே. ஜெனிவா ஏரியின் கரையில் அமைந்துள்ளது.[1] லோசன் வடமேற்கில் ஜூரா மலைகளைக் கொண்டு பிரான்சின் எல்லை நகரான எவியன் லெ பெய்ன்சை எதிர் நோக்கி அமைந்துள்ளது. லோசான் ஜெனிவாவிலிருந்து வடகிழக்கில் 62 km (39 mi) உள்ளது.
லோசான் | |
|---|---|
சுவிட்சர்லாந்தின் மாநகராட்சி | |
லோசானின் வான்வழி காட்சி | |
லோசான்-இன் அமைவிடம் | |
| நாடு | சுவிட்சர்லாந்து |
| கன்டோன் | வாட் |
| மாவட்டம் | லோசான் மாவட்டம் |
| அரசு | |
| • நகரத்தந்தை | சிண்டிகேட் தானியல் பிரெலாசு சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சி (as of 2008) |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 41.37 km2 (15.97 sq mi) |
| ஏற்றம் | 495 m (1,624 ft) |
| உயர் புள்ளி (ஜோரட்) | 929.4 m (3,049.2 ft) |
| தாழ் புள்ளி (ஜெனிவா ஏரி) | 372 m (1,220 ft) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 1,33,364 |
| • அடர்த்தி | 3,200/km2 (8,300/sq mi) |
| இனம் | லெ லோசானுவா (Les Lausannois) |
| நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
| • கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
| அஞ்சல் குறியீடு(கள்) | 1000-1018 |
| SFOS இல. | 5586 |
| இணையதளம் | www Profile (in பிரான்சியம்), SFSO statistics |
2009 இறுதியில் மக்கள்தொகை 125,885ஆக இருந்தது. நாட்டின் நான்காவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது'[2]. விளையாட்டு பிணக்குத் தீர்வாணையத்தின் தலைமையகமும் இங்குதான் உள்ளது. இந்நகரைச் சுற்றிலும் திராட்சைத் தோட்டங்கள் உள்ளன. லோசான் நகரத் தொடர்வண்டி அமைப்பில் 28 நிலையங்கள் உள்ளன. உலகில் விரைவுப் போக்குவரத்து நகர்த் தொடர்வண்டி அமைந்துள்ள மிகச்சிறிய நகராக விளங்குகிறது.
மேற்கோள்கள்
- ↑ Clarey, Christopher. "Introduction to Lausanne". த நியூயார்க் டைம்ஸ். http://travel.nytimes.com/travel/guides/europe/switzerland/lausanne/overview.html?st=cse&sq=Lausanne&scp=3. பார்த்த நாள்: 2008-04-20.
- ↑ "Welcome to International Sports Federations". International Sports Federations. Archived from the original on 2014-11-04. Retrieved 2009-09-27.
வெளி யிணைப்புகள்