வங்குடி (Vangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள ஒரு பெரிய கிராமம் ஆகும். இது சென்னையில் இருந்து 235 கி.மீ. தொலைவில் உள்ளது.

வங்குடி
Vangudi

கிராமம்
வங்குடி Vangudi is located in தமிழ்நாடு
வங்குடி Vangudi
வங்குடி
Vangudi
வங்குடி, அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°16′39″N 79°27′39″E / 11.2774°N 79.4607°E / 11.2774; 79.4607
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,784
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
PIN
612903
தொலைபேசிக் குறியீடு04331
வாகனப் பதிவுத.நா-45
கடற்கரை40 கிலோமீட்டர்கள் (25 mi)
அருகிலுள்ள நகரம்செயங்கொண்டம்
பாலின விகிதம்1.018 /
மக்களவை (இந்தியா) தொகுதிசிதம்பரம்

மக்கள்தொகையியல்

2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், வங்குடியின் மொத்த மக்கள்தொகை 4,795 ஆகும். இம்மக்கள் தொகையில் 2,419 ஆண்களும் 2,376 பெண்களும் இருந்தனர்.[1]

2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, வங்குடியின் மொத்த மக்கள்தொகை 4,784 ஆகும். இம்மக்கள்தொகையில் 2,443 ஆண்களும் 2,341 பெண்களும் இருந்தனர். மொத்தமாக இங்கு 1,170 குடும்பங்கள் இருந்தன. 0-6 வயதுடைய குழந்தைகள் 426 பேர் இருந்தனர். இது கிராமத்தின் மொத்த மக்கள்தொகையில் 8.90% ஆகும். வங்குடி கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 958 ஆகும். இது தமிழக மாநில சராசரியான 996 என்பதை விடக் குறைவாகும். குழந்தை பாலின விகிதம் 797 ஆகும். இதுவும் தமிழக சராசரியான 943 என்பதை விடக் குறைவாகும். தமிழ்நாட்டை விட வங்குடி கிராமத்தில் கல்வியறிவு சதவீதமும் குறைவாக இருந்தது. 2011 ஆம் ஆண்டில், வாங்குடி கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 70.58% ஆக இருந்தது. ஆண்களின் கல்வியறிவு விகிதம் 79.19% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 61.76% ஆகவும் இருந்தது.[2]

மேற்கோள்கள்

  1. "Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu". Archived from the original on 29 ஆகத்து 2009. Retrieved 29 ஆகத்து 2009.
  2. "Vangudi Village Population - Udayarpalayam - Ariyalur, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-10-18.

11°17′N 79°28′E / 11.283°N 79.467°E / 11.283; 79.467

"https://tamilar.wiki/w/index.php?title=வங்குடி&oldid=489879" இலிருந்து மீள்விக்கப்பட்டது