வஞ்சித்தளை என்பது பண்டைய தமிழ்ப் பாடல்களில் பயின்றுவரும் தளைகளில் ஒன்று. இது 'கனி' வாய்பாட்டில் முடியும் சீரோடு 'நேர்' அல்லது 'நிரை' அசையில் தொடங்கும் சீர் வந்து தளையும் முறை.
வஞ்சித்தளை தொடர்புடைய கட்டுரையை
தூங்கலோசை பக்கத்தில் காணலாம்.
- வஞ்சித்துறைப் பாடல்
- 1
| 'மைசிறந்தன |
மணிவரை [1]
|
| கைசிறந்தன |
காந்தளும் [2]
|
| பொய்சிறந்தனர் |
காதலர்
|
| மெய்சிறந்திலர் |
விளங்கிழாய்.'[3]
|
- இந்த வஞ்சித்துறைப் பாடலில் இந்த வஞ்சித்தளை பயின்று வந்துள்ளதைத் காணலாம்.
- வஞ்சித் தாழிசைப் பாடல்கள்
- 1
| 'மடப்பிடியை |
மதவேழம்
|
| தடக்கையான் |
வெயின்மறைக்கும்.
|
| இடைச்சுர |
மிறந்தார்க்கே
|
| நடக்குமென் |
மனனேகாண்.
|
- 2
| 'பேடையை |
யிரும்போத்துத்
|
| 1தோகையால் |
வெயின்மறைக்கும்
|
| காடக |
மிறந்தார்க்கே
|
| ஓடுமென் |
மனனேகாண்.
|
- 3
| 'இரும்பிடியை |
யிகழ்வேழம்
|
| பெருங்கையான் |
வெயின்மறைக்கும்
|
| அருஞ்சுர |
மிறந்தார்க்கே
|
| விரும்புமென் |
மனனேகாண்.' [4]
|
- இந்த வஞ்சித் தாழிசைப் பாடல்களில் இந்த வஞ்சித்தளையினைக் காணலாம்.
அடிக்குறிப்பு
- ↑ இடையில் 'கனி'ச்சீர் முன் 'நிரை'யசை வந்த வஞ்சித்தளை
- ↑ இடையில் 'கனி'ச்சீர் முன் 'நேர்'யசை வந்த வஞ்சித்தளை
- ↑ யாப்பருங்கலக் காரிகை நூற்பா 34 உரை மேற்கோள், பக்கம் 129
- ↑ யாப்பருங்கலக் காரிகை நூற்பா 34 உரை மேற்கோள், பக்கம் 128