வடுகா அல்லது வடுகா் (Vaduga) என்பவர்கள் தற்போதைய தமிழ்நாட்டில் காணப்படும் தனித்துவமான தெலுங்கு மக்கள் சாதி அடிப்படையிலான சமூகங்கள் ஆவர். அவர்களின் சாதி அடையாளங்கள் பல. அவர்கள் ஆந்திரம் மற்றும் கருநாடகத்தின் எல்லைகளுக்குள் முக்கியத்துவம் பெற்று, 1556 இல் முசுலிம் படைகளால் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தெற்கு நோக்கி குடிபெயர்ந்தனர். அவர்கள் தெலுங்கு பேசுகிறார்கள், ஆனால் பாலிநாக்கள் (கவரா), கம்மா அல்லது காப்பு நாயுடுகளிடமிருந்து வேறுபட்டவர்கள்.[1]

படிமம்:Codice Casanatense Badagas.jpg
, who inhabited the southeastern coast of India
படிமம்:Codice Casanatense Orissans.jpg
People from Orissa, in the eastern coast of India

வரலாறு

வடுகர் என்ற சொல் தமிழ்நாட்டின் வடக்கே ஆக்கிரமித்துள்ள மக்களைக் குறிக்க முதலில் பயன்படுத்தப்பட்டது. சங்க இலக்கியத்தில் இது எருமைநாடு (தோராயமாக தெற்கு கருநாடகம்) மற்றும் வேங்கடம் (திருப்பதியைச் சுற்றியுள்ள பகுதிகள்) ஆகியவற்றின் தலைவருக்குப் பயன்படுத்தப்பட்டது.[2] பெரிய புராணத்தில் மதுரையின் களப்பிரர் படையெடுப்பாளர்களைக் குறிக்க செக்கிலியர் "வடுக கருநாடர் மன்னன்" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.[3]போசளர் படையெடுப்புகள் கல்வெட்டுகளில் "பெரிய வடுகன் கலகம்" என்று அழைக்கப்பட்டன.[3] படாகா என்பது வடுகாவில் இருந்து பெறப்பட்டது.[3] எனவே வரலாற்றாசிரியர்கள் இந்த வார்த்தை ஆரம்பத்தில் கன்னடர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்புகின்றனர். இருப்பினும் இது பெரும்பாலும் தெலுங்கு மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[4] வீரபாண்டிய கட்டபொம்மன், திருமலை நாயக்கர், மகாராணி மங்கம்மாள், விருப்பாட்சி கோபால நாயக்கர் போன்ற வரலாற்றுப் பிரமுகர்கள் தமிழ்நாட்டின் வடுக நாயக்க அரசுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களாக இருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Dirks, Nicholas B. (1987). The Hollow Crown: Ethnohistory of an Indian Kingdom. Cambridge University Press. pp. 60–70, 174. ISBN 0-521-32604-4.
  2. Andhra Parishattu Varidhi, Kashi. Rajata Utsava Samputamu 1911 1935 Andhra Parishattu Varidhi, Kashi.
  3. 3.0 3.1 3.2 Andhra Parishattu Varidhi, Kashi. Rajata Utsava Samputamu 1911 1935 Andhra Parishattu Varidhi, Kashi. This is confirmed by the fact that the Periya-Puranam refers to an invader of Madura as the king of the Vaduka Karnatakas (Vaduka Karunadar Mannan). The Vadukas are therefore here identified with the Karnatakas themselves justifying the Badagas being equated with the Vudukas of the northern frontier. This is still further confirmed by inscriptional references to the Hoysala invasions of the south being referred to as Periya Vadukan Kalaham, the confusion or the revolution created by the invasion of the great Vadukan. These references are to the Hoysala invasions. Therefore it is clear that the Kannada speaking people, Sanskritised into Karnatakas, (Kannada being known in pure Tamil Karunadam as the language) were known to the Tamils as Vudukas.
  4. Andhra Parishattu Varidhi, Kashi. Rajata Utsava Samputamu 1911 1935 Andhra Parishattu Varidhi, Kashi. Somehow or other that name for the Kanarese folk seems to have been forgotten, and modern usage in Tamil restricts the term Vudukar to that section of the Vadukar who occupied the eastern borderland of the Tamil land; and the Telugus proper as well as those living to the South of them are known-now a daysas Vudukar and the language Telugu itself is known Vaduka.
"https://tamilar.wiki/w/index.php?title=வடுகா&oldid=491479" இலிருந்து மீள்விக்கப்பட்டது