வன்னி அரசு
வன்னி அரசு (Vanni Arasu) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். இவர் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திண்டிவனம் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
வாழ்க்கைச் சுருக்கம்
இவர் காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர். இவர் ஜெமிமா ஆலீஸ் மனோகரி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு பைந்தமிழ் வளவன், திலீபன் செந்தமிழ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
இவர் 2026-ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திண்டிவனம் தொகுதியிலிருந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
போட்டியிட்ட தேர்தல்கள்
| வருடம் | தொகுதி | கட்சி | முடிவு | வாக்கு சதவீதம் | எதிர்க்கட்சி வேட்பாளர் | எதிர்க்கட்சி | எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்கு சதவீதம் |
|---|---|---|---|---|---|---|---|
| 2026 | திண்டிவனம் | விசிக | வெற்றி | 32.56% | பொ. அர்ச்சுனன் | அஇஅதிமுக | 32.19% |
மேற்கோள்கள்
- ↑ "Tamil Nadu election results 2026: Full list of winners". The Hindu. May 6, 2026.
- ↑ Udhav Naig (May 4, 2026). "Congress, PMK, and VCK fail to deliver". The Hindu.