வாங் சிக்சு (Wang Shixu) சீன நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2001 ஆம் ஆண்டு சீனாவின் தியாஞ்ஞின் நகரத்தில் இவர் பிறந்தார். பிடே அமைப்பு 2021 ஆம் ஆண்டில் இவருக்கு பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டத்தை வழங்கியது. இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற 2025 சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். சதுரங்க வட்டாரங்களில், வாங் சிக்சு என்ற மற்றொரு சீன சதுரங்க வீரர் இருப்பதால், இவர் சில நேரங்களில் "வாங் சிக்சு பி" என்று அழைக்கப்படுகிறார்.

வாங் சிக்சு
நாடுசீனா
பிறப்புதிசம்பர் 2001 (அகவை 24)[1]
தியாஞ்ஞின், சீனா
பட்டம்பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் (2021)
பிடே தரவுகோள்2484 (சூலை 2024)
உச்சத் தரவுகோள்2484 (நவம்பர் 2021)

சதுரங்க வாழ்க்கை

2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவர் பெயரிடப்படாத வீரராக இருந்தபோதிலும் உலக இளையோர் சதுரங்க வாகையாளர் போட்டியில் 6ஆவது இடத்தைப் பிடித்தார். தனது முதல் கிராண்டுமாசுட்டர் விதிமுறையையும் பெற்றார்.[2]

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிடே இணையவழி சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இவர் சீனாவுக்காக விளையாடினார். சீன அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.[3]

2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் இவர் சார்ச்சா மாசுட்டர்கள் போட்டியின் பி பிரிவில் விளையாடினார். அங்கு இவர் 6/9 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தைப் பிடித்தார். கிராண்ட்மாசுட்டர் விளாடிமிர் பர்மாகினுக்கு எதிராக சமநிலை முடிவை செய்தார்.[4]

சீன மண்டல 3.5 சீனா சதுரங்கப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் 2025 சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றார்.[5] முதல் சுற்றில் கிராண்ட்மாசுட்டர் லியோன் லூக் மென்டோன்காவை வெளியேற்றியதன் மூலம் அவருக்கு ஒரு வருத்தத்தை ஏற்படுத்தினார். இருப்பினும் இரண்டாவது சுற்றில் யாகிசு கான் எர்டோக்முசால் வெளியேற்றப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. ""聊城东昌府杯"全国新秀超霸战棋手 - 王仕戌". January 2, 2021.
  2. Shah, Sagar (October 28, 2019). "World Junior norm makers and closing ceremony".
  3. "2021 FIDE Online Olympiad Top Division Pool A". September 11, 2021.
  4. "Sharjah Masters International Chess Championship 2025 - B". May 25, 2025.
  5. "Zonal 3.5 China 2025".

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வாங்_சிக்சு&oldid=494352" இலிருந்து மீள்விக்கப்பட்டது