வான்தீவு
வான்தீவு (Vhan Island, also called Van Tivu or Vaan Island) என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.[1]
| படிமம்:AMS-Gulf of Mannar (SW).jpg மன்னார் வளைகுடாவில், வான்தீவு | |
| புவியியல் | |
|---|---|
| பரப்பளவு | 0.069889 km2 (0.026984 sq mi) |
| நிர்வாகம் | |
இந்தியா | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| வட்டம் | இராமேசுவரம் |
விளக்கம்
இத்தீவானது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 6.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தீவில் இருந்த பவளப் பாறைகளின் பெரும் பகுதி முந்தையக் காலத்தில் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டதால், தீவின் நான்கில் ஒரு பகுதி நீரில் மூழ்கிவருகிறது. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, 1986 ஆம் ஆண்டு 16 ஹெக்டேராக இருந்த இந்த தீவின் பரப்பளவு 2013 ஆம் ஆண்டில் 5.7 ஹெக்டேராக சுருங்கி இருக்கிறது. இதே வேகத்தில் தீவு மூழ்கினால், 2022ஆம் ஆண்டுக்குள் வான் தீவு முழுமையாக கடலுக்குள் மூழ்கும் என சுட்டுகிறது மற்றொரு ஆய்வுக் கட்டுரை[1]. மனிதர் யாரும் வாழாக இத்தீவானது மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். இது தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. துறையினரின் அனுமதி இன்றி இங்கு யாரும் செல்லக்கூடாது. இத்தீவின் ஆக்கிரமிப்பு இனமான சீமைக் கருவேலம் மரங்கள் உள்ளன. அவற்றை வனத்துறை அகற்றி அதற்கு பதிலாக உள்ளூர் தாவர இனமான பூவரசு போன்றவற்றை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "தமிழகத்தில் மூழ்கிய தீவுகள் குறித்து நீங்கள் அறிவீர்களா? - சூழும் மற்றுமோர் ஆபத்து". BBC News தமிழ். Retrieved 2025-01-21.
- ↑ Van Tivu / Vaan Island / Vhan Island