வாயழற்சி (Stomatitis) என்பது உதடு, வாய் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[1]. வாயழற்சியானது உதடு, வாய் ஆகியவற்றில் புண்களுடனோ அல்லது புண்கள் இல்லாமலோ, சீதச்சவ்வுகளில் ஏற்படும் எல்லாவிதமான அழற்சி நிகழ்வுகளையும் குறிக்கிறது[2].

வாயழற்சி
படிமம்:Kwashiorkor 6180.jpg
புரதக்குறைநோய் உடையவர்கள் முடி மெலிதல், திரவக் கோர்வை, போதிய வளர்ச்சியின்மை, எடைக் குறைவு ஆகிய அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். மேலேக் காணப்படும் குழந்தையின் வாயழற்சி உடனுள்ள உயிர்ச்சத்து பி குறைப்பாட்டைக் குறிக்கிறது.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10K12.
ஐ.சி.டி.-9528.0
நோய்களின் தரவுத்தளம்27158

நோய்த்தொற்றுகள், உணவுக்குறைபாடுகள், ஒவ்வாமை வினைகள், கதிரியக்கச் சிகிச்சை மற்றும் பல்வேறுவிதமான காரணங்களினால் வாயழற்சி தோன்றுகின்றது. மேலும், இது பலவிதமானத் தோற்றங்களையும் கொண்டுள்ளது.

ஈறு, வாய் ஆகிய இரண்டும் பாதிப்படையும்போது ஈறு-வாயழற்சி (gingivostomatitis) என்றும், சிலநேரங்களில் ஹெர்ப்பிஸ் தீநுண்ம ஈறு-வாயழற்சி (herpetic gingivostomatitis) என்றும் அழைக்கப்படுவதுண்டு.

மேற்கோள்கள்

  1. Zaoutis, [edited by] Jeffrey M. Bergelson, Samir S. Shah, Theoklis E. (2008). Pediatric infectious diseases. Philadelphia: Mosby/Elsevier. ISBN 9780323076333. {{cite book}}: |first= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. Michael G. Stewart, Samuel Selesnick (editors) (2010-10-04). "35". Differential diagnosis in otolaryngology – head and neck surgery. New York: Thieme. ISBN 9781604062793. {{cite book}}: |last= has generic name (help)
"https://tamilar.wiki/w/index.php?title=வாயழற்சி&oldid=495078" இலிருந்து மீள்விக்கப்பட்டது