வாழவச்சனூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாழவச்சனூர் என்பது தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். இக்கிராமம் 1972-இல் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு உருவானது. இந்நாளில் மாட்டு சந்தையும் கால்நடைச் சந்தையும் இங்குள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இங்கே வேளாண்மை முக்கியமான தொழிலாகும். இதனால் கால்நடைகளான ஆடு மாடுகளின் தேவையும் அதிகம். நிலங்களைப் பண்படுத்தும் உழவுத்தொழிலுக்கான ஏர் மாடுகளுக்கான சந்தை என்பதால் அக்கம் பக்கம் உள்ள ஊர்களுக்கான தேவையும் அதிகம்.
அமைவிடம்
வாழவச்சனூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட தண்டராம்பட்டு தொகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமாகும். இது கோட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்டது. இது மாவட்டத் தலைமையகமான திருவண்ணாமலையிலிருந்து தெற்கு நோக்கி 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தண்டராம்பட்டு 7 கி.மீ. மாநிலத் தலைநகர் சென்னையில் இருந்து 205 கி.மீ ஆகும்.
கோட்டையூர் (2 கிமீ), தென்கரிம்பலூர் (3 கிமீ), தொண்டமானூர் (4 கிமீ), வாணாபுரம் (5 கிமீ), இளையாங்கண்ணி (6 கிமீ) ஆகியவை வாழவச்சனூருக்கு அருகிலுள்ள கிராமங்கள். வாழவச்சனூர் வடக்கு நோக்கி திருவண்ணாமலை தொகுதி, தெற்கே சங்கராபுரம் தொகுதி, தெற்கு நோக்கி ரிசிவந்தியம் தொகுதி, கிழக்கு நோக்கி திருக்கோயிலூர் தொகுதி ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை, திருக்கோயிலூர், போளூர், விழுப்புரம் ஆகியவை வாழச்சனூருக்கு அருகிலுள்ள நகரங்கள்.
வாழவச்சனூர் அஞ்சல் குறியீட்டு எண் 606753 மற்றும் அஞ்சல் தலைமை அலுவலகம் வாணாபுரம்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Vazhavachanur". www.onefivenine.com (ஆங்கிலம்). 2021. https://www.onefivenine.com/india/villages/Tiruvannamalai/Thandrampet/Vazhavachanur. பார்த்த நாள்: மார்ச்சு 17, 2026.