விராடன் மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருவன். இவன் மத்சய நாட்டின் மன்னர் ஆவான். துரியோதனன் ஆகியோரிடம் சூதாட்டத்தில் தோற்று மறைந்து வாழ்ந்த காலத்தில், பாண்டவர்கள் இவனது அரசவையில் ஒரு ஆண்டுக்காலம் வாழ்ந்தனர்.[1] இவனது பட்டத்து இராணி சுதேஷ்ணை ஆவார். இளவரசன் உத்தரனும், இளவரசி உத்தரையும் இவர்களது மக்களாவர்.

விராடனின் மைத்துனனும், விராட தளபதியுமான கீசகன் திரௌபதி மீது கொண்ட மையலால் வீமனால் கொல்லப்பட்டான். [2] உத்தரையை அபிமன்யு மணந்தார். -அபிமன்யு-உத்தரை தம்பதியரின் மகனே பரிட்சித்து ஆவார்.

குருச்சேத்திரப் போரில் விராடன் மற்றும் அவரது மகன் உத்தரன் ஆகியோர் துரோணரால் கொல்லப்பட்டனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=விராடன்&oldid=498787" இலிருந்து மீள்விக்கப்பட்டது