வேப்பன் வலசு
வேப்பன் வலசு (Veppan Valasu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுக்கா, மேலக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[1]
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,இங்கு மொத்தம் 226 குடும்பங்கள் வசித்து வந்தனர். இக்கிராமத்தின் மக்கள் தொகை 740 ஆகும். இதில் 366 பேர் ஆண்கள் மற்றும் 374 பேர் பெண்கள் ஆவர்.
வேப்பன்வலசு கிராமத்தில் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 57 ஆகும். இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 7.70 சதவீதமாகும். இக்கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 1022 ஆகும். இது தமிழ்நாட்டின் மாநில சராசரியான 996-என்பதை விட அதிகமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் குழந்தை பாலின விகிதம் 1280 ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரியான 943-என்பதை விட அதிகமாகும்.
தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது வேப்பன் வலசு கிராமத்தில் எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ளது. 2011 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 80.09% ஆக இருந்தபோது, இக் கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 65.45% ஆக இருந்தது. கிராமத்தில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 74.49% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 56.43% ஆகவும் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "Veppanavalasu Village Population - Palani - Dindigul, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2026-01-31.