வேலகப்புடி (Velagapudi) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[2] கிராம பஞ்சாயத்து என்ற நிலையிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, குண்டூர் மாவட்டத்தின் துள்ளூர் மண்டலத்தில் ஒரு கிராமமாக இருந்தது.[1][3] ஆந்திரப் பிரதேசத்தின் தற்காலிக தலைமைச் செயலகம் வேலகப்பூடியில் அமைந்துள்ளது.[4]

வேலகப்பூடி
Velagapudi
கிராமம்
வேலகப்புடி வான்வழி காட்சி
வேலகப்புடி வான்வழி காட்சி
வேலகப்பூடி Velagapudi is located in ஆந்திரப் பிரதேசம்
வேலகப்பூடி Velagapudi
வேலகப்பூடி
Velagapudi
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°31′34″N 80°30′45″E / 16.52611°N 80.51250°E / 16.52611; 80.51250
நாடுIndia
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
வட்டம் (தாலுகா)துள்ளூர் மண்டலம்
அரசு
 • நிர்வாகம்ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்திய மேம்பாட்டு ஆணையம்
பரப்பளவு
 • மொத்தம்8.09 km2 (3.12 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,688
 • அடர்த்தி330/km2 (860/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
522 237
இந்தியாவில் தொலைபேசி எண்கள்+91–8645
வாகனப் பதிவுஆபி-07, ஆபி08, ஆபி39, ஆபி40

வரலாறு

கிபி 1199 மற்றும் கிபி 1261 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்த காகதீய வம்சத்தின் மன்னர் கணபதி தேவா, வேலகப்புடி மற்றும் மந்தடம் ஆகிய இரண்டு கிராமங்களை மந்தடத்தில் உள்ள கோலாகி மடத்தின் ஆன்மிக போதகரான சிவாச்சாரியாருக்கு பரிசளித்தார்.[5]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 2,688 ஆகும். மொத்த மக்கள் தொகையில், ஆண்கள் 1,346 பேர் மற்றும் பெண்கள் 1,342 பேர் ஆவர். ஆயிரம் ஆண்களுக்கு 997 பெண்கள் என்ற பாலின விகிதம் இருந்தது. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 260 ஆகும். எழுத்தறிவு விகிதம் 62.81 சதவீதமாக இருந்தது. எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 1,525 ஆக இருந்தது.[1]

போக்குவரத்து

படிமம்:Velagapudi Main Road.jpg
வேலகப்புடி பிரதான சாலை

விசயவாடா மற்றும் அமராவதி வழித்தடத்தில் வேலகப்புடி கிராமம் அமைந்துள்ளது. விசயவாடா மற்றும் குண்டூரில் இருந்து வேலகப்பூடிக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கும் பேருந்துகளை ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "District Census Handbook – Guntur" (PDF). Census of India. p. 14,258. Retrieved 27 December 2015.
  2. "New Andhra capital Amaravati to compete for Smart City tag". The New Indian Express. 25 May 2016 இம் மூலத்தில் இருந்து 26 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160526185229/http://www.newindianexpress.com/states/andhra_pradesh/New-Andhra-capital-Amaravati-to-compete-for-Smart-City-tag/2016/05/25/article3450012.ece. 
  3. "Declaration of A.P. Capital City Area–Revised orders" (PDF). Andhra Nation. Municipal Administration and Urban Development Department. 22 செப்டெம்பர் 2015. Archived from the original (PDF) on 24 சூன் 2016. Retrieved 21 பெப்பிரவரி 2016.
  4. Rao, G. v r Subba (2016-02-17). "Naidu lays foundation for temporary secretariat" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/naidu-lays-foundation-for-temporary-secretariat/article8248231.ece. 
  5. Jonathan, P. Samuel (2015-05-17). "13th century inscription found neglected" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/13th-century-inscription-found-neglected/article7216127.ece. 
"https://tamilar.wiki/w/index.php?title=வேலகப்பூடி&oldid=504270" இலிருந்து மீள்விக்கப்பட்டது