வே. ரா. முத்து
வே. ரா. முத்து (V. R. Muthu, 6 அக்டோபர் 1953 – 4 மார்ச் 2026) இதயம் எண்ணெய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆவார்.[1] இவரின் தந்தை வே. வ. வ. இராஜேந்திரன் 1986 -இல் இதயம் எண்ணெய் நிறுவனத்தை நிறுவினார்.[2][3] ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் சுயேச்சையான இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் 2026 மார்ச் 4 ஆம் நாள் உடல் நலமின்றி மறைந்தார்.[4]
தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
முத்து தமிழ்நாட்டின் விருதுநகரில் வளர்ந்தார். இவர் கே. வி. எஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார்.[5] பின்னர் மும்பையில் உள்ள எம்.எம்.கே கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
விருதும் அங்கீகாரமும்
இந்தியாவின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக இவரை அங்கீகரித்து, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள பன்னாட்டு ஜூனியர் சேம்பரிலிருந்து 2007 ஆம் ஆண்டு TOBIP விருதைப் பெற்றார்.[6]
மேற்கோள்கள்
- ↑ "Idhayam diversifying into branded groundnut oil". The Hindu Business Line. 12 November 2006. http://www.thehindubusinessline.com/2006/11/12/stories/2006111204510500.htm.
- ↑ "TimesofIndia article retrieved from Idhayam official website". Timesofindia இம் மூலத்தில் இருந்து 25 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161225123311/http://idhayam.com/press_release/TimesofIndia/index.html.
- ↑ "Mr V.R. Muthu, CEO, Idhayam Group of Companies, Virudhunagar". The Hindu Business Line. 30 January 2009. http://www.thehindubusinessline.com/2009/01/30/stories/2009013051822300.htm.
- ↑ "Industrialist V.R.Muthu, the brain behind Idhayam oil brand is no more". uniindia.
- ↑ "My Journey | Rtn. V. R. Muthu". My Site (in ஆங்கிலம்). Retrieved 2024-10-13.
- ↑ "Ten_Outstanding_Young_Indians_Program" (PDF). Junior Chamber International India. 27 August 2010.