வைட்டிலா - 1
வைட்டிலா - 1 (VTL 1), வேளாண் பெயர்; உயரமான சூட்டுப் பொக்காலி (Chootupokkali-Tall), எனப்படும் இந்த நெல் வகை, கேரளாவின் ஒரு புதிய நெல் இரகமாகும்.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS),[2] வெளியிட்ட இந்த நெல் இரத்தை பொதுவாக உயரமான சூட்டுப் பொக்காலி எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[3]
| வைட்டிலா - 1 VTL 1 |
|---|
| வேளாண் பெயர் |
| உயரமான சூட்டுப் பொக்காலி |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 115 - 120 நாட்கள் |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பின்னணி
பொக்காலி எனப்படும் உப்புத்தன்மையை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நெல் வகையான இது, உப்புத்தன்மை வாய்ந்த நிலப் பகுதிகளுக்கு ஏற்றது. நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 - 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. மேலும் இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும்.[1][4]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "Paddy varieties of Kerala - Medium duration varieties - Vyttila-1 (Chootupokkali-Tall)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-09.
- ↑ Rice Research Station, Vyttila
- ↑ "KAU Agri-infotech portal". www.celkau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-09.
- ↑ "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-09.