வைட்டிலா - 4 (VTL 4) எனப்படும் இந்த நெல் வகை, செட்டிவிரிப்பு மற்றும் IR 4630-22-2-17 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைவு அமைப்பு (HS) முறையில் உருவாக்கப்பட்ட கேரளாவின் ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும்.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS), 1993[1] ஆம் ஆண்டு இந்த நெல் இரகத்தை வெளியிடபட்டதாக அறியப்படுகிறது.[2]

வைட்டிலா - 4
VTL 4
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
செட்டிவிரிப்பு X IR 4630-22-2-17
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
வெளியீடு
1993
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

கடலோர உப்புத்தன்மை கொண்ட பகுதிகள் (பொக்காளி சுற்றுச்சூழல் அமைப்பு) மற்றும் பிற வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகள் மற்றும் ஆழமான நீர் சூழ்நிலைகளில் விரிப்பு பருவத்திற்கு ஏற்றது. நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 120 - 125 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[3] மேலும் இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும்.[4][5]

சான்றுகள்

  1. 1.0 1.1 "Varieties Released - 39 Vyttila 4". kau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-11.
  2. Rice Research Station, Vyttila
  3. "Paddy varieties of Kerala - Medium duration varieties - Vyttila-4". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-11.
  4. "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-11.
  5. "KAU Agri-infotech portal". www.celkau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-11.
"https://tamilar.wiki/w/index.php?title=வைட்டிலா_-_4&oldid=504790" இலிருந்து மீள்விக்கப்பட்டது