வைட்டிலா - 5
வைட்டிலா - 5 (VTL 5) எனப்படும் இந்த நெல் வகை, பாரம்பரிய நெல் இரகமான மசூரியிலிருந்து சடுதி மாற்றம் (Mutation) முறையில் உருவாக்கப்பட்ட கேரளாவின் ஒரு புதிய நெல் வகையாகும் (இரகம்).[1] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS), 1996[1] ஆம் ஆண்டு இந்த நெல் இரகத்தை வெளியிடபட்டதாக அறியப்படுகிறது.[2]
| வைட்டிலா - 5 VTL 5 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| மசூரி |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 115 - 120 நாட்கள் |
| வெளியீடு |
| 1996 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பின்னணி
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 - 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. உயரமானதும், மிதமான இடைவெளி விட்டு வளரும் தன்மை கொண்டதுமான இந்நெற்பயிர், பற்றுயிரி, இலைக் கருகல், தண்டுத் துளைப்பான், இலை மடிப்பு மற்றும் நெல் வண்டுத் தவிர முக்கிய நோய்கள் மற்றும் பூச்சிகளைத் தாங்கும் திறன் கொண்டது.[3] மேலும் இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும்.[4][5]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "Varieties Released - 40 Vyttila 5". kau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-11.
- ↑ Rice Research Station, Vyttila
- ↑ "Paddy varieties of Kerala - Medium duration varieties - Vyttila-5". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-11.
- ↑ "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-11.
- ↑ "KAU Agri-infotech portal". www.celkau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-11.