வைட்டிலா - 7
வைட்டிலா - 7 (VTL 7) எனப்படும் இந்த நெல் வகை, IR 8 மற்றும் பட்னாய் 23 இடையேயான, கலப்பினப்படுத்தப்பட்ட கேரளாவின் ஒரு புதிய கலப்பின நெல் இரகமாகும். அதிக மகசூல் தரும், ஓரளவு உயரமான இரகமான இது, உப்புத்தன்மை, அமிலத்தன்மை மற்றும் வெள்ளத்தைத் தாங்கும் தன்மை கொண்டது எனவும், பொக்காலி பகுதிக்கு ஏற்றது எனவும் கூறப்படுகிறது.[1][2] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS), 2006 ஆம் ஆண்டு[2] இந்த நெல் இரகத்தை வெளியிடபட்டதாக அறியப்படுகிறது.[3]
| வைட்டிலா - 7 VTL 7 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| IR 8 X பட்னாய் 23 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| வெளியீடு |
| 2006 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பின்னணி
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 110 - 115 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. மேலும் இந்நெல் இரகத்தின் அரிசி, நீண்ட மற்றும் மெல்லிய சிவப்பு நிறமாகும். கேரள கடலோர உப்பு சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்றது என கூறப்படுகிறது.[4] மேலும் வேறொரு மூலத்தின்படி இதன் அரிசி, வெள்ளை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.[5]
சான்றுகள்
- ↑ Rice varieties of Kuttanad
- ↑ 2.0 2.1 "Varieties Released". kau.in (ஆங்கிலம்) - (List upto 2019). Retrieved 2025-10-13.
- ↑ Rice Research Station, Vyttila
- ↑ "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-13.
- ↑ "KAU Agri-infotech portal". www.celkau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-13.