ஸ்ரீநாத்
ஸ்ரீநாத் (Srinath பிறப்பு: சூலை 18,1973) ஓர் இந்திய நடிகர், இயக்குநர், அரசியல்வாதிஆவார். இவர் மணப்பாட்டைப் பூர்விகமாகக் கொண்ட திரு இரிச்சர்ட் பர்னாந்து அவர்களின் மகன் திரு ஆல்நாத் பர்ணாந்து அவர்களின் மூத்த மகன்.
ஸ்ரீநாத் | |
|---|---|
| பிறப்பு | 18 சூலை 1973 சென்னை, தமிழ்நாடு |
| பணி | நடிகர், இயக்குநர் (திரைப்படம்) |
| செயற்பாட்டுக் காலம் | 1992-தற்போதுவரை |
| தந்தை | மரு. அல்நாத் |
கூடுதல் தகவலாக ஸ்ரீநாத்தின் தாத்தா திரு ரிச்சர்ட் பர்னாந்து தூத்துக்குடியில் பாய்மரக்கப்பல் ( தோணி) (TN.30 எரிக் ஆல்நாத்) வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.
தொழில் வாழ்க்கை
கல்லூரி நாட்களில் இருந்தே தமிழ் நடிகர் விஜய் நண்பரான இவர் பல படங்களில் அவருடன் பணியாற்றியுள்ளார்.[1][2]
இயக்குனர் ஜீவாவுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அவரது இயக்கத்தில் இவர் நடித்த உள்ளம் கேட்குமே (2005) மற்றும் உன்னாலே உன்னாலே (2007) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார்.[3]
சந்தோஷ் சுப்பிரமணியம் (2008), மாசிலாமணி (2009), வேட்டைக்காரன் (2009) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் இவர், முத்திரை (2009) என்ற திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.[4][5]
2026 ஆம் ஆண்டில், தூத்துக்குடி தொகுதியில் த. வெ. க. சார்பில் போட்டியிட்டார்.[6] சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7]
மேற்கோள்கள்
- ↑ "Vijay's friends Sanjeev, Sriman and Srinath join Thalpathy 64". சினிமா எக்ஸ்பிரஸ். Retrieved 2019-10-05.
- ↑ "Unseen: 'Master' actor Srinath shares Vijay's school days picture". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/unseen-master-actor-srinath-shares-vijays-school-days-picture/articleshow/82495358.cms.
- ↑ "Jeeva's blue-eyed boy: Srinath". Times of India. 14 January 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Jeeas-blue-eyed-boy-Srinath/articleshow/4535211.cms?referral=PM.
- ↑ "When 'Muthirai' fails to impress". The new Indian Express. https://www.newindianexpress.com/entertainment/review/2009/Jul/02/muthirai-fails-to-impress-64485.html.
- ↑ "Review: Vallavanukku Pullum Aayudham is a forgettable film". Rediff. https://www.rediff.com/movies/report/review-vallavanukku-pullum-aayudham-is-a-forgettable-film-south/20140512.htm.
- ↑ https://www.thehindu.com/elections/candidates/Tamilnadu2026/srinath-763/
- ↑ Desk, India Today News (2026-05-04). "Thoothukkudi Election Result 2026 Live: TVK's Srinath defeats DMK's P. Geetha Jeevan with 26772 votes". India Today (in ஆங்கிலம்). Retrieved 2026-05-04.
{{cite web}}:|last=has generic name (help)