ஸ்ரீ சரணி
நல்லபுரெட்டி ஸ்ரீ சரணி (Nallapureddy Shree Charani பிறப்பு: ஆகஸ்ட் 4,2004) ஓர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். இவர் உள்நாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆந்திராவினையும், மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி அணியினையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] 2025 மகளிர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணியில் இவர் விளையாடினார்.
2025 இல் சரணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | நல்லபுரெட்டி ஸ்ரீ சரணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 4 ஆகத்து 2004 கமலாபுரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | இடதுகை வழமைச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பந்துவீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 154) | 27 ஏப்ரல் 2025 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | 21 பெப்ரவரி 2026 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப சட்டை எண் | 40 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப அறிமுகம் (தொப்பி 87) | 28 June 2025 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி இ20ப | 1 மார்ச் 2026 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப சட்டை எண் | 40 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2022–தற்போது வரை | ஆந்திர மாநிலப் பெண்கள் அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2025–தற்போது வரை | பெண்கள் டெல்லி கேப்பிடல்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 19 May 2025 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நல்லபுரெட்டி ஸ்ரீ சரணி (Nallapureddy Shree Charani பிறப்பு: ஆகஸ்ட் 4,2004) ஓர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். இவர் உள்நாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆந்திராவினையும், மகளிர் பிரீமியர் லீக்கில் தில்லி அணியினையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2] 2025 மகளிர் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணியில் இவர் விளையாடினார்.
ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
சரணி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தின் வீரபுணாயுனிபல்லே மண்டலத்தில் உள்ள எரமல பல்லி கிராமத்தில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[3][4][5] ஆந்திராவின் ஒய். எஸ். ஆர் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த முதல் பெண் துடுப்பாட்ட வீரராக தனது 20வது வயதில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[6] ஆறாம் வகுப்பில் படிக்கும்போது இவரது தந்தை இவரை இறகுப்பந்தாட்டம் விளாஇயாடக் கூறினார். இவரது தந்தை சந்திரசேகர் ரெட்டி ராயலசீமா அனல் மின் திட்டத்தில் பணிபுரிகிறார். துடுப்பாட்டம் விளையாடுவதற்கு முன்பு கோ-கோ விளையாடியுள்ளார். இவரது மாமா கிசோர் குமார் ரெட்டி, பயிற்சியிலும் விளையாட்டிலும் இவருக்கு ஆதரவளித்தார்.[7] சுமிருதி மந்தனா, யுவராஜ் சிங் ஆகியோர் இவரது உத்வேகமளுக்கும் நபர்கள் ஆவர். இவரது முதல் மகளிர் பிரீமியர் இலக்கு எலிஸ் பெர்ரி ஆவார்.[8]
சர்வதேசப் போட்டிகள்
ஏப்ரல் 2025 இல், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் முத்தரப்பு தொடருக்கான தேசிய அணிக்கு இவர் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9][10][11] 27 ஏப்ரல் 2025 அன்று இலங்கைக்கு எதிரான அடுத்த ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[12][13] மே 2025 இல், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான ஒருநாள் மற்றும் இ20 அணியில் பெயரிடப்பட்டார்.[14][15] அதே தொடரில் தனது இ20 போட்டியில் 2025 சூன் 28 அன்று நான்கு இலக்குகளை வீழ்த்தினார். அறிமுகப் போட்டியில் சிரவந்தி நாயுடுவுக்குப் பிறகு நான்கு இலக்குகளைக் கைப்பற்றியவர் எனும் பெருமையை பெற்றார்.[16][17] . 2025ஆம் ஆண்டின் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் முக்கிய பங்கு வகித்தார்.
மேற்கோள்கள்
- ↑ "N. Charani". Women's Premier League. Retrieved 19 May 2025.
- ↑ "N. Charani". Women's Premier League. Retrieved 19 May 2025.
- ↑ Hoskote, Nagabhushanam (4 November 2025). "From Kadapa To The World Cup Extraordinary Journey Of Sri Charani". www.deccanchronicle.com.
- ↑ "From backyard dreams to World Cup glory: Sree Charani's incredible rise". 15 October 2025 – via The Economic Times - The Times of India.
- ↑ "Sree Charani's Journey from Kadapa Village to Indian Cricket Team". AP7AM. 9 April 2025. Retrieved 19 May 2025.
- ↑ "Kadapa's Sree Charani Selected for Indian Women's Cricket Team". AP7AM. 8 April 2025. Retrieved 19 May 2025.
- ↑ Velamuri, Anirudh (10 April 2025). "Shree Charani looking forward to playing with the legends on the Indian team". The Hindu. Retrieved 19 May 2025.
- ↑ ""My biggest inspirations are Yuvraj Singh and Smriti Mandhana": DC's Shree Charani ahead of GG clash". Revsportz. 7 March 2025. Retrieved 19 May 2025.
- ↑ "N Sree Charani becomes first woman from YSR-Kadapa to make it to Indian cricket team". Telangana Today. 10 April 2025. Retrieved 19 May 2025.
- ↑ "Who is N Shree Charani, WPL sensation fast-tracked to the national setup". Female Cricket. 8 April 2025. Retrieved 19 May 2025.
- ↑ "The new trio of women's cricket: A fiery seamer from Chandigarh, an all-rounder from Kadapa, a left-arm spinner from Jabalpur". The Indian Express. 9 April 2025. Retrieved 19 May 2025.
- ↑ "Cricket constantly on my mind... dream is to play in a World Cup, rising star Shree Charani says after making India debut". Sportstar. 29 April 2025. Retrieved 19 May 2025.
- ↑ "Spinners, Rawal seal big win for India". ESPNcricinfo. Retrieved 19 May 2025.
- ↑ "Team India (Senior Women) squads for the England tour announced". BCCI. Retrieved 19 May 2025.
- ↑ "India unveil power-packed squads for England tour". ICC. 15 May 2025. Retrieved 19 May 2025.
- ↑ "Mandhana's ton, Charani's four-fer headline India's thumping win". Cricbuzz. Retrieved 28 June 2025.
- ↑ "Mandhana, Shree Charani hand England their heaviest T20I defeat". ESPNcricinfo. Retrieved 28 June 2025.
வெளி இணைப்புகள்
- Shree Charani இல்ESPNcricinfo
- Shree Charani இல்கிரிக்கெட் காப்பகம் (சந்தா தேவை