1,2-இருபுளோரோபென்சீன்

1,2-இருபுளோரோபென்சீன் (1,2-Difluorobenzene) C6H4F2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். அரோமாட்டிக்கு சேர்மமான 1,2-இருபுளோரோபென்சீன் நிறமற்றதாக இருக்கும். ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் இந்நீர்மம் உலோக ஒருங்கிணைவுச் சேர்மங்களின் மின்வேதியியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.

1,2-இருபுளோரோபென்சீன்[1]
O-Difluorobenzene.svg.png
இருபுளோரோபென்சீன் மூலக்கூறு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2-இருபுளோரோபென்சீன்
வேறு பெயர்கள்
ஆர்த்தோ-இருபுளோரோபென்சீன்
இனங்காட்டிகள்
367-11-3 Yes check.svg.pngY
ChEBI CHEBI:38583 Yes check.svg.pngY
ChemSpider 9325 Yes check.svg.pngY
InChI
  • InChI=1S/C6H4F2/c7-5-3-1-2-4-6(5)8/h1-4H Yes check.svg.pngY
    Key: GOYDNIKZWGIXJT-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C6H4F2/c7-5-3-1-2-4-6(5)8/h1-4H
    Key: GOYDNIKZWGIXJT-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9706
  • Fc1ccccc1F
UNII AW7QGMW29C Yes check.svg.pngY
பண்புகள்
C6H4F2
வாய்ப்பாட்டு எடை 114.093 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.1599 கி/செ.மீ3
உருகுநிலை −34 °C (−29 °F; 239 K)
கொதிநிலை 92 °C (198 °F; 365 K)
(insoluble) 1.14 கி/லிட்ட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

பயன்பாடு

1,2-இருபுளோரோபென்சீன் இடைநிலை உலோக ஒருங்கிணைவுச் சேர்மங்களின் மின்வேதியியல் பகுப்பாய்விற்கு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஒப்பீட்டளவில் வேதி வினைகளில் செயலற்றதாகவும் பலவீனமாக ஒருங்கிணைப்புத்திறனும் கொண்டு பல மின்பகுளிகள் மற்றும் உலோக அணைவு உப்புகளைக் கரைக்கும் அளவுக்கு அதிகமான மின்கடத்தா மாறிலியைக் கொண்டுள்ளது. உலோக அணைவுச் சேர்மங்களுக்கான ஒரு பலவீனமான ஒருங்கிணைப்பு கரைப்பானாக 1,2-இருபுளோரோபென்சீன் பயன்படுத்தப்படுகிறது. ஒப்பீட்டளவில் மிகவும் வலுவாக ஒருங்கிணைக்கும் கரைப்பான்களான அசிட்டோநைட்ரைல், இருமெத்தில் சல்பாக்சைடு, இருமெத்தில்பார்மமைடு போன்றவற்றுக்கு மாற்றாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. [2]

ஒரு மயக்க மருந்தாகவும் 1,2-இருபுளோரோபென்சீன் பயன்படுத்தப்படுகிறது. [3]

1,2-இருபுளோரோபென்சீனை அசிட்டைலேற்றம் செய்து 3',4'-இருபுளோரோபுரோப்பியோபீனோன் தயாரிக்க இயலும். ஆலசனேற்ற கேத்தினோன் தயாரிப்பில் இவ்விளைபொருள் முக்கியப்பங்கு வகிக்கிறது. [4]

பாதுகாப்பு

நீர்ம நிலையிலும் வாயுநிலையிலும் எளிதில் தீப்பற்றும். இதனால் தீங்கிழைக்கும் சிதைவு வேதிப்பொருள்கள் உருவாகும். கார்பன் ஆக்சைடுகள், ஐதரசன் புளோரைடு போன்ற வாயுக்கள் வெளியேறலாம். புளோரினேற்றம் செய்யப்பட்ட இரப்பர் கையுறைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். [5]

மேற்கோள்கள்

  1. David R. Lide, ed., CRC Handbook of Chemistry and Physics, 89th Edition (Internet Version 2009), CRC Press/Taylor and Francis, Boca Raton, FL.
  2. O'toole, Terrence R.; Younathan, Janet N.; Sullivan, B. Patrick; Meyer, Thomas J. (1989). "1,2-Difluorobenzene: a relatively inert and noncoordinating solvent for electrochemical studies on transition-metal complexes". Inorganic Chemistry 28 (20): 3923. doi:10.1021/ic00319a032. 
  3. "1,2-Difluorobenzene". PubChem. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
  4. GB 1140754, Danilewicz, John Christopher & Michael Szelke, "3,4-difluorophenyl compounds", published 1969-01-22 
  5. "SAFETY DATA SHEET". Sigma-Aldrich. September 28, 2019. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=1,2-இருபுளோரோபென்சீன்&oldid=144541" இருந்து மீள்விக்கப்பட்டது