1929 சுயமரியாதை மாநாடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

1929 சுயமரியாதை மாநாடு என்பது செங்கல்பட்டில் பெப்ரவரி 17, 18 ம் திகதிகளில் பெரியாரின் தலைமையில் நடைபெற்ற மாநாடு ஆகும்.[1][2] இதுவே முதாவது சுயமரியாதை மாநாடு. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக, சமயம்/மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, சுயமரியாதை திருமணத்துக்கு சார்பாக, விதவை மறுமணத்துக்கு ஆதரவாக இங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுயமரியாதை இயக்கத்தின், திராவிட இயக்கத்தின் வளர்ச்சியிலும், தமிழக வரலாற்றிலும் இந்த மாநாடு முக்கியம் பெறுகிறது. சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ப. சுப்பராயன் இதனைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இம்மாநாட்டில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் தன் பெயரில் இருந்த “நாயக்கர்” என்ற சாதிப் பட்டத்தை துறந்து ஈ. வே. ராமசாமி என்று தன் பெயரை மாற்றினார்.

மேற்கோள்கள்

  1. "ஈ.வெ.கி. சம்பத்தும்…திராவிட இயக்கமும்…". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2011/sep/12/%E0%AE%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-9659.html. பார்த்த நாள்: 14 June 2021. 
  2. "வரலாற்றுத் தடம்: அவர் ஏன் பெரியார் ஆனார்?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=1929_சுயமரியாதை_மாநாடு&oldid=146646" இருந்து மீள்விக்கப்பட்டது