1937 ஆத்திரேலிய ஏர்லைன்சு சடின்சன் விபத்து
வார்ப்புரு:Infobox aircraft occurrence
1937 ஆத்திரேலிய ஏர்லைன்சு சடின்சன் விபத்து (1937 Airlines of Australia Stinson crash) எனும் இது, 1937 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 இல் நடந்த ஒரு வானூர்தி விபத்தாகும். ஆத்திரேலிய ஏர்லைன்சுக்கு சொந்தமான "ஸ்டின்சன் மாடல் ஏ" (Stinson Model A) வகையைச் சார்ந்த, "பிரிஸ்பேன் நகரம்" (City of Brisbane) எனும் பெயருடைய வானூர்தி ஒன்று, ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் தலைநகரான பிரிஸ்பேனிலிருந்து - அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரமுமான சிட்னிக்கு 2 விமானிகள், மற்றும் 5 பயணிகளையும் சுமந்துச் சென்ற அவ்வானூர்தி காணாமல்போனது. பின்பு, விபத்துக்குள்ளானதாக அறியப்பட்ட அந்த வானூர்தி விபத்தில், இரு விமானிகளும், இரண்டு பயணிகளும் கொல்லப்பட்டனர். மேலும், அவ்வானூர்தி விபத்தில் எஞ்சியிருந்த மூன்று பயணிகளில் ஒருவர், முதலுதவிக்கு முயற்சிக்கும் போது பலியானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "ASN Wikibase Occurrence # 28526". aviation-safety.net - 1996-2016. Archived from the original on 2015-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-09-12.