1957 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1957 என்பது 1957-ல் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தால், 1957 மே 11 அன்று வாக்கெடுப்பு நடந்திருக்கும்.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1957

← 1952 11 மே 1957 1962 →
  படிமம்:Photograph of Sarvepalli Radhakrishnan presented to First Lady Jacqueline Kennedy in 1962.jpg
வேட்பாளர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
கட்சி வார்ப்புரு:Infobox election/shortname வார்ப்புரு:Infobox election/shortname
சொந்த மாநிலம் தமிழ்நாடு

தேர்வு வாக்குகள்
போட்டியின்றி தேர்வு

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
வார்ப்புரு:Infobox election/shortname

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
வார்ப்புரு:Infobox election/shortname

அட்டவணை

தேர்தல் அட்டவணையினை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏப்ரல் 9, 1957 அன்று வெளியிட்டது.[2]

வரிசை எண் வாக்கெடுப்பு நிகழ்வு தேதி
1. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 18 ஏப்ரல் 1957
2. வேட்புமனு பரிசீலனைக்கான தேதி 20 ஏப்ரல் 1957
3. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 23 ஏப்ரல் 1957
4. வாக்கெடுப்பு தேதி 11 மே 1957
5. எண்ணும் தேதி -

முடிவுகள்

இத்தேர்தலில் வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 735 பேர் வாக்காளராக கொண்டிருந்தது. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மட்டுமே சரியான முறையில் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர், எனவே 23 ஏப்ரல் 1957 அன்று துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தை மே 1957-ல் தொடங்கினார்.[2]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. BACKGROUND MATERIAL REGARDING FOURTEENTH ELECTION TO THE OFFICE OF THE VICE-PRESIDENT, 2012, ELECTION COMMISSION OF INDIA
  2. 2.0 2.1 "Background material related to Election to the office of Vice-President of India, 2017". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.

வார்ப்புரு:இந்தியத் தேர்தல்கள்