1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

தமிழர்விக்கி இல் இருந்து
(1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox cricket tournament 1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1983 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1983) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் மூன்றாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1983 சூன் 9 முதல் சூன் 25 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகியவற்றுடன் முதற்தடவையாக சிம்பாப்வே அணியும் கலந்துகொண்டது. இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்களால் வெற்றியீட்டி மூன்றாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

பங்கேற்ற நாடுகள்

இப்போட்டியில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்திய அணிகளுடன் புதிதாக டெஸ்ட் அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்ட (1981) இலங்கை அணியும், டெஸ்ட் அந்தஸ்தைப் பெறாத தென்ரொடீசியா (சிம்பாபே) அணியும் பங்கேற்றன.

இறுதிப் போட்டி

மூன்றாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இந்திய, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியினரால் 54.4 ஓவர்களில் (இப்போட்டி 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்து) சகல விக்கட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. (சிரீகாந்த் 38, பட்டேல் 27) வெற்றிக்காக 184 ஓட்டங்களைப் பெறவேண்டிய மேற்கிந்திய அணி நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடிய போதிலும்கூட, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் திணறினர். இப்போட்டியில் மத்திமவேகப்பந்து வீச்சாளரான மதன்லால் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும், அமரநாத் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். 52 ஓவர் முடிவில் மேற்கிந்திய அணியினரால் சகல விக்கட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

முதல்தடவையாக ஆசிய நாடொன்றான இந்தியா 43 ஓட்டங்களினால் மேற்கிந்திய அணியினைத் தோற்கடித்து மூன்றாவது உலகக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது. இப்போட்டியில் அமர்நாத் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

அணிகள்

A பிரிவு B பிரிவு
 இங்கிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் PAK  இந்தியா
வார்ப்புரு:நாட்டுத் தகவல் NZL  ஆத்திரேலியா
 இலங்கை வார்ப்புரு:நாட்டுத் தகவல் ZIM

பிரிவுகளுக்கிடையே போட்டி

பிரிவு A

அணி பு வி வெ தோ NR RR
 இங்கிலாந்து 20 6 5 1 0 4.671
வார்ப்புரு:நாட்டுத் தகவல் PAK 12 6 3 3 0 4.014
வார்ப்புரு:நாட்டுத் தகவல் NZL 12 6 3 3 0 3.927
 இலங்கை 4 6 1 5 0 3.752

வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international

பிரிவு B

அணி பு வெ தோ NR RR
 மேற்கிந்தியத் தீவுகள் 20 6 5 1 0 4.308
 இந்தியா 16 6 4 2 0 3.870
 ஆத்திரேலியா 8 6 2 4 0 3.808
வார்ப்புரு:நாட்டுத் தகவல் ZIM 4 6 1 5 0 3.492

வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international

அரையிறுதி

வார்ப்புரு:Limited overs international

வார்ப்புரு:Limited overs international

இறுதி ஆட்டம்

வார்ப்புரு:Limited overs international

சில செய்திகள்

மூன்றாவது உலகக் கிண்ண போட்டித் தொடரில் இலங்கை அணி நியுசிலாந்து அணியைத் தோற்கடித்தது.

முதற்தடவையாக உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொண்ட சிம்பாபே அணி தான் கலந்துகொண்ட முதல் போட்டியிலே அவுஸ்திரேலியா அணியைத் தோற்கடித்தமை முக்கிய அம்சமாகும்.

சான்றுகள்


வெளி இணைப்புகள்

வார்ப்புரு:துடுப்பாட்ட உலகக்கிண்ணம்