1995 அட்லாண்டிக் சூறாவளி பருவம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

1995 அட்லாண்டிக் சூறாவளி பருவம் ஒரு வழக்கமான அட்லாண்டிக் சூறாவளி பருவமாகும். இது பொதுவாக அட்லாண்டிக் கடலில் வெப்ப மண்டல சூறாவளி உருவாக்கம் நடைபெற்று வரும் உயர்-செயல்பாட்டு சகாப்தத்தின் துவக்கமாக கருதப்படுகிறது. இது 1887, 2010, 2011, மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட சூறாவளிகளைப் போல பல பெயரிடப்பட்ட சூறாவளிகளை கொண்ட பருவமாக இருந்தது. இந்த பருவத்தில் இருபத்தி ஒரு வெப்பமண்டல சூறாவளிகள், பதினைந்து பெயரிடப்பட்ட புயல்கள் மற்றும் பதினொரு சிறிய சூறாவளிகள் மற்றும் ஐந்து பெரிய சூறாவளிகளை உருவாகியது. இந்த பருவம் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் 1 ஆம் தேதி 1995 ஆம் ஆண்டு தொடங்கி நவம்பர் மாதம் 30 ஆம் தேதி முடிவடைந்தது. இது அட்லாண்டிக் கடலில் மிகவும் வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகும்போது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும். பருவத்தின் இறுதி புயல் சூறாவளி டான்யா நவம்பர் மாதம் 1 ஆம் தேதி 1995 ஆம் ஆண்டு அன்று உருவானது. ஜூன் மாதம் 2 ஆம் தேதி 1995 ஆம் ஆண்டு முதல் வெப்ப மண்டல சூறாவளி அலிசன் சூறாவளி உருவானது.[1] வார்ப்புரு:Infobox hurricane season

மேற்கோள்

  1. Philip J. Klotzbach; William M. Gray (December 8, 2006). Extended Range Forecast of Atlantic Seasonal Hurricane Activity and U.S. Landfall Strike Probability for 2007 (Report). Fort Collins, Colorado: Colorado State University. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் July 1, 2012.