2-அசிட்டைல்தயோபீன்

2-அசிட்டைல்தயோபீன் (2-Acetylthiophene) என்பது CH3C(O)C4H3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தக சேர்மமாகும். மஞ்சள் நிறத்தில் ஒரு நீர்மமாக 2-அசிட்டைல்தயோபீன் காணப்படுகிறது. அசிட்டைல்தயோபீனின் இரண்டு சமபகுதியங்களில் ஒன்றான இச்சேர்மம் மிகுந்த பயனுள்ள சேர்மமாகும். தயோபீன்-2-கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் தயோபீன்-2-அசிட்டிக் அமிலம் ஆகிய இரண்டு சேர்மங்களையும் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக 2-அசிட்டைல்தயோபீன் பயன்படுகிறது.[1]

2-அசிட்டைல்தயோபீன்
படிமம்:2-acetylthiophene.svg
இனங்காட்டிகள்
88-15-3
பப்கெம் 6920
பண்புகள்
C6H6OS
வாய்ப்பாட்டு எடை 126.17 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிற நீர்மம்
உருகுநிலை 9 °C (48 °F; 282 K)
கொதிநிலை 214 °C (417 °F; 487 K)
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. Swanston, Jonathan (2006). "Thiophene". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a26_793.pub2. ISBN 3527306730..
"https://tamilar.wiki/w/index.php?title=2-அசிட்டைல்தயோபீன்&oldid=225336" இலிருந்து மீள்விக்கப்பட்டது